Thursday, July 06, 2006

நீங்கள் ஒரு தேவதூதரா? - பதில் - 4

Photobucket - Video and Image Hosting


யேசு சிலுவையில் அறைய பட இரண்டாவது காரணம் அவரே தான். சிலுவையில் அறைய போகும் விஷயம் அவருக்கு தெரிந்திருந்தது. அவருடைய இறுதி விருந்தில் அவரே கூறுகிறார் மறுநாள் தன்னை சிலுவையில் அறையபோவதாக.

தப்பித்திருக்கலாமே...... அப்போது அவருக்கு வயது 33 தான். சாகும் வயதா அது. வாழவேண்டிய வயதல்லவா ஏன் முயற்ச்சிக்கவில்லை. சாவை நோக்கி அவரே நட்ந்தார்... அதற்குதான் அவருக்கு சிலுவை..

கொலைக்கும் வன்முறைக்கும் என்றைக்கும் நான் உடந்தை இல்லை யேசு நல்லவர் அவர் பாட்டிற்கு அவர், 30 வருடங்கள் நாகரீக உலகமான எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் பிரயாணம் செய்து அரைகுறையாக கற்றுக் கொண்டதை 3 வருடங்கள் தான் போதித்தார்.

நானாயிருந்தால் ஏதோ மனம் பிறழ்ந்தவர் பிதற்றுகிறார் என் விட்டிருப்பேன். மீண்டும் ரோமனியர்களிடம் அடிமையான் இந்த யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்து அவரை தெய்வமாக்கி விட்டார்கள்..

யேசு என்ன கற்று தந்தார். உன்னை போல் உன் எதிரியையும் நேசி என்றார். முதலில் ஒருவர் தன்னை தானே நேசிக்கவேண்டும்.

எதிரியை நேசிப்பது சுலபம். அவ்வாறு நேசித்தால் நீ உயர்ந்தவனாக கருதபடுவாய். அந்த கருத்துக்காக உன்னால் எதிரியை நேசிக்க முடியும்.... தன்னைதானே நேசிப்பது மிக கடினம்.

நீ நீயாக இருக்கவே விரும்பவில்லை. அதாகவேண்டும் இதாகவேண்டும் இவனை போல் முன்னேறவேண்டும் என எப்போழுதுமே நினக்கிறாய்.

நீ நீயாகவே இருக்க விரும்பாத போது எப்படி உன்னை நீயே நேசிக்கமுடியும்..

யேசு சொல்கிறார் வெறுக்காதே அன்பை செலுத்து என்று இதையே இவருக்கு முன் வந்த புத்தரும் மகாவீரரும் லவோ சூ வும் கூறினார்கள்.

ஆனால் நான் சொல்கிறேன் அன்பும் வெறுப்பும் வேறு வேறு அன்று
இரண்டும் ஒன்றே.

அன்பு தலைகீழானால் வெறுப்பு.

அன்பு மறைந்தால் வெறுப்பும் மறையும்.

அன்பில்லாத இடத்தில் வெறுப்புக்கு என்ன வேலை?

இதை யேசு உணரவில்லை.

புரியாமல் அவர் வெளிஉலகத்தில் கற்று வந்ததை கிளிப் பிள்ளை போல் மீண்டும் மீண்டும் சொன்னார்.

அவர் பேச்சில் அவரே மயங்கி தான் ஒரு தேவதூதர் என அழைத்துக் கொண்டார்..

இந்த நினைப்புதான் அவர் சிலுவையில் அறைய பட இரண்டாவது காரணம்....


என்னைப் பார்த்து நீங்கள் 25 வது தீர்த்தாங்கரரா என வினவிகின்றனர்.

ஜைன மதத்தில் 24 தேவதூதர்கள் தான் இருப்பர் என அசைய முடியாத் ஒரு மூட தனமான நம்பிக்கை.

இந்த கடைசி தூதுவர்கான போட்டியில் புத்தரும் இருந்தார் என்பது தான் கவலையான சேதி. இந்த விஷய்த்தில் நான் புத்தரை மதிக்கவில்லை. இவரும் மஹாவீரரைப் பற்றி கிண்டல் செய்தார் அந்த 24 வது தூத்ர் போட்டியில் வெற்றி பெற.


மஹாவீரர் மட்டும் ஒழுங்கா? அவருக்குமுன் மஹாக்கலி கோசல் என்று ஒரு துறவி இருந்தார். அவர் ஒரு விபாசாரியின் வீட்டில் இறந்தாராம் அவர் இறக்கும் தருவாயில் நான் கடைசி தூதுவனில்லை மஹாவீரர் தான் உண்மையான தூதுவர் என் அந்த விபசாரியிடம் சொல்லிவிட்டு இறந்தாராம். இதைச்சொன்னது யாருமில்லை மஹாவீரரே தான். யார் அந்த விபசாரி? சாகும் தருவாயில் கோசல் ஏன் அங்கு செல்லவேண்டும்? அதைப் பற்றி சொல்லவேயில்லை. எல்லாம் பதவிக்காக தான்.

இந்த மாதிரி தேவதூத பதவி எனக்கு தேவையில்லை.. நான் சாதரண மனிதன் ...சிவா.. நான் நானாக இருக்கிறேன் ... நீ...-நீயாக இரு

ஒஷோவே இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா?

சிவா மேலும் சொல்வேன் கேள்

பரசுராமரை இந்துக்கள் ஒரு அவதாரமாக நம்புகிறார்கள்.

பரசுராமர் தன் தாயரை கொலை செய்தார் ஏனென்றால் அவருடைய தந்தையார் அவரின் மேல் சந்தேகம் கொண்டதால்..

எந்த கணவன் மனைவியிற்கிடையில் சந்தேகமில்லை. ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை இல்லாதால் தானே திருமணம் என்ற சட்ட பந்தம் இருக்கிறது. இல்லையென்றால் காதல் ஒன்றே போதுமே..

யாரும் காதலை நம்புவதில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. காதல் ஒரு மலரை போல் உண்மையானது. ஒரு நாள் மலரும் மணம் பரப்பும் பிறகு வாடி இறந்துவிடும். காகிதப் பூக்கள் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை. இந்த காகித பூக்கள் தான் திருமணம் என்ற சட்ட சம்பிரதாயம். காதல் சில நாட்களில் மறைந்து விடும். சட்டம் நிலைத்து நிற்கும்.
அங்கே காதல் இருப்பது போல பாசாங்கு இருக்கும். பாசங்கு எங்கு இருக்கின்றதோ அங்கே சந்தேகங்கள் கொடிக்கட்டிப் பறக்கும்.

உண்மையான காதலர்கள் இதை உணர்வார்கள். அங்கே அழகுணர்ச்சி மிகுந்திருக்கும். அந்த உணர்ச்சிகள் அவர்களை முழுமையாக்கும். அவர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பிறகு எல்லாம் முடிந்துவிடும். உண்மைக் காதலர்கள் ஒருவருக்கொருவர் கடமைப் பட்டிருப்பார்கள். அவர்கள் சணடையிடுவதில்லை. ஒருவருக்கொருவர் சில தெய்வீக தருணங்களைத் தந்திருப்பார்கள். இதை எப்போதும் நினந்திருப்பர். நல்ல நண்பர்களாக பிரிவர்.

காதலிருந்தால் எல்லாம் அழகாக இருக்கும் . காதலில்லையேல் எல்லாம் அசிங்கமாக இருக்கும். காதலில்லாத கணவன்/மனைவி வாழ்வது என்னென்று சொல்வது. விபசாரத்திற்கும் இதற்கும் வேறுபாடில்லை. திருமணம் என்ற சம்பிரதாயம் இந்த விபசாரத்தை சட்டமாக்குகிறது.

இயறகையாகவே பரசுராமரின் தந்தைக்கு அவரின் மனைவியின் மேல் சந்தேகமிருந்தது. ஏனென்றால் அவள் அதி அழகானவள்.

ஒரு நாள அவள் தூங்கும் போது அவள் தலையைக் கொய்ய அவருடைய தந்தை ஆணையிட்டார். தந்தையின் ஆணைக்கு அடிபணிவது தனயனின் கடமை என இந்து மதம் சொல்கிறது. அடிபணிதல் ஒரு நல்ல குணாதிசய்ம என் இந்து மதம் மட்டுமில்லை எல்லா மதங்களும் கூறுகின்றன.

ஆனால் நான் சொல்கிறேன். புரட்சி செய். புரட்சி தான் என் மதம்

அடிபணிய வைப்பது மததலைவர்களின் , அரசியவாதிகளின், கொடுங்கோலர்களின் சதி. அப்போது தான் அவர்கள் பிழைப்பு நடக்கும். அப்போது தானே மக்களை அடிமையாக வைத்திருக்க முடியும்

பரசுராமர் அவர் தந்தையின் வார்த்தைக்கு அடிபணிந்து பெற்ற தாயின் கொலை செய்து மாபெரும் பாவத்தை செய்துவிட்டார். பெற்றதாயை கொல்ல எந்த ஒரு கொடியனுக்கும் மனது வராது.

அதன் பிறகு அவரது தந்தையார் அவனை ஒரு கொடிய கொலைக்காரனாக மாற்றிவிட்டார். அவருடைய தந்தையார் ஒரு முனிவர் அவருக்கும் அரசருக்கும் தகறாரு வந்ததால் சத்திரிய குலத்தையே அழிக்க்கும் பட் மகனுக்கு உத்தரவிட்டார். மகனும் தந்தைக்கு அடிபணிந்து எல்லா சத்திரியர்களையும் 36 முறை அழித்தார்.

இவர் தனிமனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான், ஹிட்லர், ஸ்டாலின்(கருணாநிதியின் மகனல்ல), முசோலினி, மாசேதுங் இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளவிட அதிகம்.

சத்திரியா குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர்.
இவர் கடவுளின் அவதாரமென்றால் சாத்தானின் அவதாரம் யார்?

நான் நிச்சயமாக இந்த கேடு கெட்ட மனிதர்களைப் போல் இல்லை. நான் ஒரு சாதரணன்..

மேலும் சொல்வேன் சிவா...


தொடரும்.........

9 comments:

said...

ஒரு முடிவோட கிளம்பிட்டீங்க போல... தன்னைப் போல அடுத்தவனையும் திட்ட திட்டமா ?

said...

சிவா,

பதிவுக்கு நன்றி.

தொடரட்டும் உங்கள் பணி.

மிக்க நன்றி.

said...

வனவராயன்,

நான் யாரையும் திட்டலங்கே நம்ம ஆசான் சொன்னதை அப்படியே திருப்பி சொல்றேன்.

said...

பரசுராமர் கதை நான் வேறுமாதிரியாகக் கேள்விப்பட்டேன். க்ஷத்திரிய குலத்தை அழிக்கப் புறப்பட்டது தாய்க்கு அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தான். அதாவது, அவர் முதலில் தாயின் தலையைக் கொய்தாலும், பிறகு அவர் தந்தையிடமே வரம் பெற்று தாயை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.

அதன் பிறகு தந்தை ஒரு அரசனால் கொல்லப்பட, தாய் 21 முறை மார்பில் அடித்துக் கொண்டழ, 21 தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழிப்பேன் என தாயிடம் சபதம் செய்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நல்ல பதிவு

http://ennamopo.blogsome.com/2006/07/07/im_chat/
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

டோண்டு சார், எனக்கும் தெரியும் பரசுராமரின் கதை வேறு என்று. ஆனால் அவர் தன் தாயை கொன்றதும் பிறகு பல தலைமுறை ஷத்திரியர்களை கொன்றதும் உண்மைதானே. இவ்வளவு கொலைகள் செய்தவர் கடவுளின் அவதாரமா? இதுதான் இங்கே கேள்வி. இந்த மாதிரி அவதாரங்களும் தேவதூதர்களும் நமக்கு தேவையா?

said...

Siva nice to read this in Tamil.Keep it going sir...
Do you have his cassetts , if so you can podcast.
with best
CT

said...

CT சார், இவருடைய புத்தகங்கள் தமிழில் கிடைக்கின்றன. என்னை விட அதிக தமிழ் ஞானம் உள்ளவர்கள் அருமையாக மொழி பெயர்த்துள்ளார்கள். அவர்களில் முக்கியமானவர் கவிஞர் புவியரசு ஹிக்கின்பாதம்ஸில் முயற்சிக்கவும்

said...

//எந்த கணவன் மனைவியிற்கிடையில் சந்தேகமில்லை. ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை இல்லாதால் தானே திருமணம் என்ற சட்ட பந்தம் இருக்கிறது. இல்லையென்றால் காதல் ஒன்றே போதுமே..//

இந்த கருத்தை முழுக்க ஏற்க முடியவில்லை சிவா.

திருமணம் என்பது சட்டபூர்வ ஒப்பந்தம்.காதல் போதும் என்றாலும் நாளை பிறக்கும் குழந்தைக்கு சொத்து,கணவன்/காதலன் இறந்தால் மனைவிக்கு அவர் சொத்து தடை இன்றி போய் சேரவேண்டும் என பல காரணங்கள் திருமணத்துக்கு பின் உள்ளன.

ஒரு ஆணும்,பெண்ணும் தங்கள் காதலை முறைப்படி உலகுக்கு அறிவிக்கும் அறிவிப்பே திருமணம் என நினைக்கிறேன்.