Monday, July 24, 2006

வாழ்க சனநாயகம் - 2

திரு நாகை சிவா அவர்கள் வாழ்க சனநாயகம் என ஒரு அருமையான் பதிவை இன்று வெளியிட்டார்கள். அதில் அவர் தங்கத்தலைவ்ரைப் பற்றி சிலாகித்திருந்தார்.

இங்கே நான் தானைத் தலைவர், திரா'விட' குடிதாங்கி பகுத்தவறிவின் பரிணாம வளர்ச்சி, கலைஞர் கருணாநிதி அவர்களின் சனநாயாகத்தைப் பற்றி சிலாக்கிக்கிறேன்.

நிருபர் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, என் எல் சி விவகாரத்தில் மத்திய அரசை நிர்பந்தித்ததைப் போல் பெட்ரோலியப் பொருட்களின் வரியை குறைக்கச் சொல்லி மத்திய அரசை நிர்பந்தித்து ஏழை மக்களுக்கு உதவலாமே?

கருணாநிதி: வரியா வர்ர்ரியா நீயும் நானும் போரட்டத்தில் குதித்து தீ குளிக்கலாம் வர்ர்ரியா?


ஆஹா என்ன தமிழ்.... என்ன வார்த்தை பிரயோகம்.... அந்த கால ஆதிகேசவனல்லவா இன்றைய கலைஞர்.. தீக்குளிக்க பத்திரிக்கை நிருபர், பதவிக்கு மகனும் பேரனும்.

இதுதான் சனநாயகம்... சனநாயக வாழ்த்துக்கள் அவ்வப்போது தொடரும்..


பி.கு.

நன்றி துக்ளக்

6 comments:

said...

தமிழ் குடிதாங்கியப்பா அவரு. கால்கரிக்கு ஆட்டோ வராது அப்பங்கற நினைப்பா? பிளைட்டுல ஆட்டோ அனுப்புவோம். மகன் state பேரன் central.

said...

ஐயா அதுக்குத்தான் ஜாக்கிரதையா துக்ளக் கே துணைக்கு அழைத்திருக்கிறேன்

said...

சிவா,

இப்படி துக்ளக் எதுவும் துணைக்கு அழைக்காமல் நான் பாட்டுக்கு அரசியல் திரா'விடப் பெத்தடின்னு தொடராக போட்டிருக்கிறேன்.

ஆட்டோ அனுப்பிருவாங்களோ? எனக்கு?

http://harimakesh.blogspot.com/2006/07/14-2.html
பாருங்க. நம்ம வலைப்பூவில்.

அன்புடன்,

ஹரிஹரன்

said...

//சனநாயக வாழ்த்துக்கள் அவ்வப்போது தொடரும்..//
அண்ணாத்த இது நல்ல ஐடியா இருக்கு. இந்த சனநாயக மேட்டர தொடர்ந்து போட்டு விடுவோம்.

//ஐயா அதுக்குத்தான் ஜாக்கிரதையா துக்ளக் கே துணைக்கு அழைத்திருக்கிறேன் //
நினைத்தேன், எதுக்குடா தேவையில்லாம அண்ணன் துக்ளக்கை வம்புக்கு இழுத்து இருக்காரே என்று. இது தான் மேட்டரு.

said...

இதே வார்த்தையை ஜெயலலிதா சொல்லியிருந்தால் சன் டீ,வி அந்த நிருபரை விலைக்கு வாங்கி தீக்குளிக்க நான் தயார் ஜெயலலிதா என்னுடன் வந்து தீக்குளிக்க ரெடியாக இருந்தால் என்று அறிக்கை விட வைத்திருக்கும். ஜெயலலிதாவோடு சேர்ந்து குளிக்க நான் ரெடி என்று வெற்றி கொண்டான் பேசியிருப்பார்.( அதாவது தீக்குளிக்கிறதை சொன்னேன்பா என்று கொஞ்சம் கேப் விட்டு சொல்வார்). பொதுவாகவே பிரச்சார உத்தி, கூட்டத்தை திசை திருப்புவது போன்றவை தி.மு.க அளவிற்கு அ.தி.மு.க விற்கு வரவில்லை. ஆனாலும் பொதுவாக கலைஞர் மீடியாவோடு இணைந்து போவதால், மீடியா இது போன்ற விஷமங்களை கண்டிப்பதில்லை. ராமதாஸ் மற்றும் ஜெயலலிதா எப்போதும் மீடியாவை சாடுவதால், மீடியாவும் பதிலுக்கு பிராண்டுகிறது!!!!கலைஞர் கேட்பதோடு விட்டார். ஜெயலலிதாவாக இருந்தால்....

said...

பொதுவாக கலைஞர் மீடியாவோடு இணைந்து போவதால், மீடியா இது போன்ற விஷமங்களை கண்டிப்பதில்லை. ராமதாஸ் மற்றும் ஜெயலலிதா எப்போதும் மீடியாவை சாடுவதால், மீடியாவும் பதிலுக்கு பிராண்டுகிறது!!!!
..

உண்மைதான்...மீடியா தான் இன்றய கிங் மேக்கர்.!

ஒரு ஆளை ஓவர் நைடில் ஹீரோ வாக்க முடியும், அதே மீடியா அதே ஆளை ஓவர் நைடில் ஜீரோகூட ஆக்க முடியும்..

உண்ஐயை பொய்யாக்கமுடியும், பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கவும் முடியும்..
அவர்களை பகைத்துக் கொள்ளுதல் கூடாது...