Tuesday, July 04, 2006

என் அரேபிய அனுபவங்கள் - 10.3

இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முனனிருந்த அடிமை முறையைக் காணலாம். உங்களின் எஜமானின் ஆதரவில்லாமல் ஒரு வேலையும் நடக்காது. அவரின் விருப்பத்திற்கு எதிராக வேறு வேலை மாற்றவோ அல்லது வேலையை விடவோ முடியவே முடியாது.

இவைகளைப் பற்றி 10.3 ல்


போன பதிவின் கடைசி வரிகள் மேலுள்ளவை.

இனி.....


அல்கோபார் நகரில் என் ப்ளாட்டுக்கு அருகில் உள்ள ப்ளாட்டில் என் நண்பர் ஒருவர் தங்கி இருந்தார். இவரது பெயரை ஜான்சன் என்று வைத்துக் கொள்வோம். இவர் என்னைப் போல் ஒரு பொறியாளர். மிகப்பெரிய அமெரிக்க கம்பனியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். இவர் அருகிலுள்ள ஒரு ரிபைனரி கட்டுமாண பணிக்களுக்காக அடிக்கடி சைட்டிற்கு செலவது வழக்கம். காலையில் சென்றால் மதியம் 4 மணிக்கு வீடு திரும்புவார்.

ஒரு புதனன்று அவருடைய மாமனார் திருச்சியில் ஒரு விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என ஆபிஸிற்கு போன் வந்தது. (நாங்கள் அங்கிருந்த காலங்களில் (1992-1997) எங்கள் வீடுகளில் போன் கிடையாது. செல்போனும் அப்போது இல்லை.). இது அவருக்கும் அவரது மனைவிற்கும் மிக அதிர்ச்சி தந்த செய்தி. இவர் உடனடியாக கிளம்ப வேண்டும். சவூதியின் சட்டபடி அந்நாட்டிலிருந்து வேளியேற Exit -Re-Entry Visa வாங்க வேண்டும். இந்த மாதிரி அவசரத்திற்கு இந்த விசா விமான நிலையத்தில் வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது (என்னே கருணை.... அரசாங்கமும் , மன்னரும் அன்பே உருவானர்கள்).. ஆனால் இந்த விசா வாங்க உங்களின் எஜமானரின் உத்தரவும் அதனுடன் உங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு உங்களின் மேய்ப்பாளரும் விமான நிலையத்திற்கு வரவேண்டும் . அப்போது தான் இந்த விசா கருணைக்கொண்டு தருவார்கள்.

ஜான்சன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவருடைய வெள்ளைகார மானேஜரை சந்தித்து உத்தரவையும் பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு அவருடைய மேய்ப்பாளரை தேடியிருக்கிறார். புதன் வார இறுதி அல்லவா, அவர் ஒய்வெடுக்க எஸ்கேப் ஆகியிருந்தார். அவரின் வீட்டைக் கண்டுபிடித்து போனால அங்கும் அவரில்லை. அவரில்லாமல் காரியம் நடக்காது. இருந்தாலும் முயற்சிக்கலாம் என நாங்கள் விமான நிலையதிற்கு முயற்சித்தோம்....ம்ம்ம்ம்ம்ம்.. மேய்பாளன் இல்லாமல் பேசவே முடியாது என்று விட்டார்கள். சரி வெள்ளைக்காரனை கூட்டிபோனால் காரியம் நடக்கும் என முயற்சித்தோம்... அப்போது அங்கே உள்ள அன்பே உருவான அரேபியர்கள் "என்ன மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறீகள் எதாவது குற்றம் செய்துவிட்ட ஓட நினைக்கிறீர்களா? " என கேட்டதில் ஜான்சன் உடன் சென்ற நண்பர்களும் அந்த வெள்ளைக் கார மானேஜரும் நொந்து சோகத்துடன் வீடு திரும்பினோம். அந்த சகோதரி அழுத அழுகை.........

நினைத்த நேரத்தில் சொந்த நாட்டிற்கு கூட திரும்ப முடியாத 2 மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை மிகக் கஷ்டமானது தான்

லேபர் காம்ப் அதாவது தொழிலாளர் முகாம்....

வரிசையாக கட்டைபெட்டிகளால் ஆன புறாக் கூடுகள் போல் வீடுகள்.. இதில் ஒவ்வொரு அறையிலும் 4 முதல் 6 பேர்கள் இரண்டடுக்கு கட்டில்கள். இதில் தான் தொழிலாளிகளின் வாழ்க்கை

ஒரு மாதமா..இரண்டு மாதமா... இல்லை இல்லை அவர்கள் அங்கு வாழும் வரை இது தான் அவர்களின் இருப்பிடம் (சுமார் 4 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை).

இவர்கள் நகரத்திற்கு அருகில் இருந்தால் சிறிதே பொழுது போகும்.


சில முகாம்கள் பாலைவனத்திற்கு நடுவில். சில சகோதரர்கள் அவர்கள் வாழ்ந்த 5 வருடங்களில் நகரத்தைப் பார்த்தது சுமார் 4/5 முறைதான்.

இதைப் பற்றிக் கேட்டால் "இங்கே அவர்கள் வந்தது வேலை செய்யதான்.. அவர்களுக்கெதுக்கு பொழுது போக்குகள்" என அரேபிய முதலாளிகள் கூறுவார்கள்.

இவர்களின் வாழ்க்கை மிகக் கடினமானது தான்


சரி நாகரீகத்தின் தொட்டில் அமீரகத்தில்...

லேபர் காம்ப் ஒரு தனி ஏரியாவில் கட்டி அவர்களை அங்கேய தங்க வைத்திருக்கிறார்கள். தினமும் இவர்களை ஒரு குப்பை லாரி போல் ஒரு லாரியில் ஏற்றி வேலைக்கு கூட்டி சென்று கூட்டி வ்ருவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு துபாயில் மட்டும்...இந்த மாதிரி லேபர்களை லாரிகளில் அழைத்து செல்லகூடாது என சட்டமிட்டு ப்ட்டாளிகளின் அன்பு தோழர்கள் என தங்களை வெளிபடுத்திக் கொண்டார்.

அமீரகத்தில் Exit -Re-Entry Visa தேவையில்லை ஆனால் பெரும்பாலான லேபர்களின் பாஸ்போர்ட் அவர்களின் மேய்ப்பாளர்களிடம் தான் இருக்கும். அவருடைய கருணை இல்லாமல் அவரால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது.

பெரும்பாலான வெள்ளை காலர் தொழிலாளிகளின் பாஸ்போர்ட் அவர்களின் கையில் தான் இருக்கும். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேறலாம். ஆனால் வேலை மாறவேண்டுமானால் அவருடைய எஜமானரின் ஒப்புதல் தேவை. இந்த காலங்களில் பன்னாட்டு கம்பெனிகளும் அரசாங்க கம்பெனிகளும் இந்த ரிலீஸ்களை வழங்கி அவர்கள் நாகரீகத்தின் தொட்டில் என பறை சாற்றுகின்றனர்.


இந்த இடத்தில் ஒரு சின்ன Comparison. கனடாவில் எண்ணை வளம் எடுக்க ஏராளமான தொழிலாளர்கள் தேவை படுகின்றனார். ஆனால் இவர்களின் குடியேற்ற சட்டங்கள் பொறியாளர்களையும், படித்த வெள்ளைகாலர் தொழிலாளிகளை மட்டும் அனுமதிக்கிறது.

ஒரு வானொலி பேட்டியில் இங்குள்ள மனித வள மேம்பாட்டு அமைச்சரிடம் நாமும் மத்திய கிழக்கு நாடுகளை போல் கூலி தொழிலாலர்களை அழைத்து வங்து செய்து பொருளாதாரத்தை உயர்த்தலாமே என கேள்வி கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : "நாமும் அரபுநாடுகளை போல் இந்தியாவிலிருந்தும் சைனாவிலிருந்தும் லேபர்களை அழைத்து வரலாம். ஆனால் அவர்களுடன் அவர்களின் குடும்பம் வரும். அதனால் அதிக வீடுகள் கட்டவேண்டிவ்ரும். பள்ளி கூடங்கள், மருத்துவ மனைகள், டாக்டர்கள், ஆசிரியர்கள்... என எல்லா வசதிகளும் செய்ய நாளாகும். அந்த லேபர்களை வேலை வாங்கி விட்டு அவர்கள் குடும்பம் மற்றும் மற்ற வசதிகள் இல்லமால் வாட நாம் சகல வச்திகளுடன் வாழ நம் மனம் வழி தருமா.

நம் சமுதாயம் அரபு சமுதாயத்தை போன்ற பிற்பட்ட சமுதாயம் இல்லை. நாம் காலத்தில் பின்னோக்கி செல்வது உசிதமில்லை. பொருளாதாரத்தை விட சமுதாய நலனே முக்கியம்"

இதுவல்லவோ மனித நேயம்..

சரி கனடாவில் லேபர் காம்ப் இல்லையா? இருக்கிறது.

அதே போல கட்டை புறா கூடுகள்.

ஆனால் அறைக்கு ஒருவர், டெலிபோன், டிவீ, இணையம் போன்ற வசதிகள்.

வார கடைசியில் குடும்பத்தினரை சங்திக்க தனி விமானம். நகரத்தில் கிடைக்கும் சம்பளத்தைவிட 25% முதல் 50% அதிக சம்பளம் போன்ற வசதிகள் .

இதுதான் மனித நேயம்..

அரேபியாவில் இருப்பது ஆளாதிக்கம்...பணத்திமிர்....தொடரும்.....

47 comments:

said...

// லேபர் காம்ப் அதாவது தொழிலாளர் முகாம்.... இது அடிமைகளின் கூடாரம்...

வரிசையாக கட்டைபெட்டிகளால் ஆன புறாக் கூடுகள் போல் வீடுகள்.. இதில் ஒவ்வொரு அறையிலும் 4 முதல் 6 பேர்கள் இரண்டடுக்கு கட்டில்கள். இதில் தான் தொழிலாளிகளின் வாழ்க்கை//

இந்த வரிகள் இலங்கையில், மலை நாட்டில் வதியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழரைத் தான் ஞாபகப் படுத்துகிறது.
அவர்களும் இன்னமும் இதே போல் தான் வாழ்கிறார்கள். இந்தக் காம்ப் களின் பெயர் லயன் கள் (lines)


//ஒரு மாதமா..இரண்டு மாதமா... இல்லை இல்லை அவர்கள் அங்கு வாழும் வரை இது தான் அவர்களின் இருப்பிடம் (சுமார் 4 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை).
//
இலங்கையில் 150 வருடங்களாக இப்படியே வாழ்கிறார்கள்.

said...

சிவாண்ணா,சாத்தான்குளத்து வேதம் ஆசிஃப் ஊர்ல இல்ல, நல்லா அடிச்சு ஆடுங்க -:)))))))

உண்மைதான், லேபர்ஸ் எல்லாம் ஒரு மாதம் வாழ்வதற்காய் ஒரு வருடம் சாகிறவர்கள் தான்.

said...

ஜெயபால், மிகக்கொடுமையாக இருக்கிறது. தமிழர்கள் இலங்கையில் வென்று சுயமரியாதையுடன் வாழவேண்டும்

said...

மனசு சார்,

இணையம் உலகம் முழுவதும் உள்ளதே.

நான் உண்மையை தான் எழுதுகிறேன். ஆட்டத்திற்கு வேறுமாதிரியான பதிவுகள் உள்ளன. உ.ம். நயந்தாரா

மேலும் ஆஸிப் மீரான் ஊரில் இருந்தால் என்னாகிவிடும்?

அவரை என் பதிவில் கூட அழைத்திருக்கிறேன். அடுத்த முறை துபாய் போகும் போது அவரை சந்திக்கவும் முயல்வேன்

said...

சிவா,
தகவலுக்கு நன்றிகள்.

பி.கு:- ஆகஸ்ட் மாதம் Toronto வருவதாக எங்கேயோ வாசித்த ஞாபகம். ஆகஸ்ட் மாதத்தின் முற்பகுதியில் வருவதாயின் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். ஆகஸ்ட் நடுப்பகுதியிலிருந்து செப்ரம்பர் வரை முதல் வாரம் வரை Toronto வில் நிற்க மாட்டேன். இந்தக் காலப்பகுதி தவிர்த்து எந்த நேரம் வந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள்.

said...

// லேபர் காம்ப் அதாவது தொழிலாளர் முகாம்.... இது அடிமைகளின் கூடாரம்...

வரிசையாக கட்டைபெட்டிகளால் ஆன புறாக் கூடுகள் போல் வீடுகள்.. இதில் ஒவ்வொரு அறையிலும் 4 முதல் 6 பேர்கள் இரண்டடுக்கு கட்டில்கள். இதில் தான் தொழிலாளிகளின் வாழ்க்கை//


தொழிலாளர் நலம் விரும்பும் கம்யூனிஸ்டுகள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

said...

சிவா,
இந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் 10-15% மானோர் தங்கள் வாழ்க்கைத் தரத்தைச் சற்று உயர்த்திக் கொண்டு விட்டார்கள். இன்னொரு 10-15 வீதமானோர் தமிழீழப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். மீதி 70-80 வீதமானோர் இன்னும் அதே கயிட்டங்களுடனும் துன்பத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தலைவரில் ஒருவர் தான் ஆற்முகம் தொண்டமான் அவர்கள்.

said...

//சவூதியின் சட்டபடி அந்நாட்டிலிருந்து வேளியேற Exit -Re-Entry Visa வாங்க வேண்டும்.//

ada paavigala.. oru naatai vittu veliya portahukku visa vaanganumgaratha first time ippo than kelvi paduren..

Siva pls clarify.. is this Visa needed if the resident need to return back to Saudi or just leaving the Saudi forever??

said...

வெற்றி அழைப்பிற்கு நன்றி. நான் ஆகஸ்ட் 26ந்தி முதல் 30 வரை வருகிறேன். இன்னொருமுறை சந்திக்கலாம்

said...
This comment has been removed by a blog administrator.
said...

பிரிட்டன் இந்தியாவில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர் என்ற பெயரில் அடிமைகளாக், கூலிகளாக மொறிசியஸ், கரீபியன், இலங்கை போன்ற நாடுகளுக்கு 1830களில் கொண்டந்தார்கள். அவர்களின் நிலையும் நீங்கள் சொல்வது போன்று தான்.

தெரிஞ்சும் பிறகேன் வாறியள். உங்கள் தேசத்திலை சீதனம், வரதட்சனை என்டு விஷமத்துக்குச் செலவுகளை வைச்சுக் கொண்டு குடும்பத்திலை இருக்கிற ஆம்பிளைப் பிள்ளையளை எப் பாடு பட்டாலும், யாரிட்டை அடி வாங்கினாலும், வசை கேட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு வேண்டியது எல்லாம் காசு காசு காசு! என்டு ஏன் அனுப்புவான்?

சொந்த இடத்திலையே, வருகிறதுக்குள்ள மட்டா வாழ்த் துணிவிருந்தா, மத்திய கிழிக்கார் எப்பிடி நடந்தா என்ன? அமெரிக்கர் எப்பிடி நடந்தா என்ன? நாம் உண்டு நம் வாழ்வுண்டென்டு இருக்கலாம்.

said...

நான் உங்களின் பதிவுகளை படித்துள்ளேன், ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை. எனக்கு தோன்றுவது என்ன்வென்றால், இத்தனை 1992-1997? காலம் //லேபர் காம்ப்//ல் எப்படி வாழ்ந்தீர்கள்? என்பதுதான். அரேபியா உங்களை அழைக்கவில்லை, நீங்களே விரும்பிச்சென்றதுதான். அது லேபர் காம்ப் என்று உங்களுக்கு புரிய இத்தனை காலமானதா? "என் அரேபிய அனுபவங்கள்" என தலைப்பு வைத்தது சரி. அனுபவங்களை மட்டும் எழுதுங்கள். வாசிப்பர் புரிந்துகொள்வார்கள். உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை உங்கள் அனுபவத்தோடு இணைக்கும் போது "மவனே எதுக்கு அப்புறம் இத்தனை காலம் அங்க இருந்தே?" என்ற கேள்விதான் மிஞ்சும். இதனை பல திசைகளிலிருந்து இன்னமும் எதிர்கொண்டுதனிருக்கிறீர்கள். சில வார்த்தைகள், அபிப்ராயங்களை தவிர்த்து எழுதிப்பாருங்கள். மற்றவற்றை வாசிப்பருக்கு விட்டுவிடுங்கள். வாசிப்பவன் முட்டாள் அல்ல. புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். நன்றி.

said...

Exit visa பத்தி சான் ஃப்ரான்ஸிஸ்கோ கான்ஸல் ஜெனரல் திரு B.S.பிரகாஷ் எழுதியுள்ளதை இங்கு காணலாம்.

http://ia.rediff.com/news/2006/may/31bsp.htm

said...

//லேபர் காம்ப் அதாவது தொழிலாளர் முகாம்.... இது அடிமைகளின் கூடாரம்...

வரிசையாக கட்டைபெட்டிகளால் ஆன புறாக் கூடுகள் போல் வீடுகள்.. இதில் ஒவ்வொரு அறையிலும் 4 முதல் 6 பேர்கள் இரண்டடுக்கு கட்டில்கள். இதில் தான் தொழிலாளிகளின் வாழ்க்கை.//

நீங்கள் கூறிய இந்த செயல்கள் சிங்கப்பூரிலும் நடந்தன/நடக்கின்றன (எல்லா இடங்களிலும் இல்லை). பாஸ்போர்ட் பிடுங்களும் இங்கே உண்டு.

//பெரும்பாலான வெள்ளை காலர் தொழிலாளிகளின் பாஸ்போர்ட் அவர்களின் கையில் தான் இருக்கும். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேறலாம். ஆனால் வேலை மாறவேண்டுமானால் அவருடைய எஜமானரின் ஒப்புதல் தேவை//

சில ஆண்டுகளுக்கு முன் வரை இதே நிலைமைதான் இங்கேயும் (for Employment pass holders).

அப்படி என்றால் இங்கே இருப்பவர்களும் அடிமைகளா?

said...

சிவா
அந்த அமைச்சருக்கு ஒரு பெரிய வாழ்த்து கொடுங்க.
அருமையான சிந்தனை.தான் வாழ அடுத்தவனை உபயோகப்படுத்தும் போதே அவனுடைய நலன்களை பார்பவரை மனிதனாக பார்க்கமுடியவில்லை.
அதற்கு மேலாகத்தான் பார்க்கவேண்டும்.
"சமுதாய நலனே முக்கியம்"-என்ன வார்தைகள்.மனதை நெகிழ வைக்கின்றன.

said...

//Exit -Re-Entry Visa எடுத்து இந்தியாவிற்கு வந்து திரும்பவில்லை என்றால் பிறகு அங்கே வாழ்நாள் முழுவதும் போகமுடியாது.//

தற்போது இதை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். Exit -Re-Entry Visa எடுத்து இந்தியாவிற்கு வந்து திரும்பவில்லை என்றால் விசா முடியும் தினத்தில் இருந்து ஒரு வருட காலத்திற்கு வேறு எந்த ஸ்பான்சருக்கும் பணிபுரிய முடியாது. அதுவே வீட்டு டிரைவர் என்றால் மூன்று மாதங்கள் என்பதாக கேள்வி.

மோகன் P. சிவம்

said...

"Exit -Re-Entry Visa எடுத்து இந்தியாவிற்கு வந்து திரும்பவில்லை என்றால் பிறகு அங்கே வாழ்நாள் முழுவதும் போகமுடியாது "

Siva, This is wrong. Even if an employee failed to return within the specific period of time, he can still come on a new employment visa but after a specific period of time.

"பேப்பரில் உங்கள் போட்டோ போட்டு இந்த அடிமை காணவில்லை என விளம்பரம் கொடுப்பார்கள்"Siva, Absconding ad usually comes in local news papers, if an employee fail to show to work for more than a specific period of time (No Exit Re Entry visa in this case). At the same time If an employee leaves the county on Exit - Re Entry visa for some specific period and he fail to retun to the country within that specific period, then no one will place any ad in local news papers. Because the employee left the country with the knowledge of his employer and coming back is his own decision.

said...

சிவாண்ணா, சும்மாகாச்சுக்கும் தான் சொன்னேன். அதான் சிரிப்பான் போட்ருக்கேனே...நோ சீரியஸ் ப்ளீஸ்.

//உ.ம். நயந்தாரா //

என்னது நயன் தாராவுக்கு உம்மாவா... சிபி..........எங்கே?????????

said...

இனிய சிவா,

எப்படி உங்களுக்கு அரபு நாடுகள் மீது இத்தனை வெறுப்பு வந்ததென்று தெரியவில்லை.

ஒட்டு மொத்தமாக வளைகுடாப் பகுதியினர் அனைவரையும் வெளுத்து வாங்குகிறீர்கள். சல்தா ஹை.

வரிக்கு வரி 'அடிமை' என்னும் பட்டத்தையும் எங்களுக்கெல்லாம் சூட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்.

உங்கள் வலைப்பூ உங்கள் விருப்பம் எங்களையெல்லாம் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள்.

பெரியவர்கள் சொல்லியும் விடாப்பிடியாக அடிமைப் பட்டத்தை வளைகுடா வாழ் இந்தியர்களின் மீது சூட்டிப்பார்ப்பதில் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்வோ தெரியவில்லை.

உங்களது கொள்கையில் நீங்க இத்தனை பிடிப்பாக இருப்பதால் சில யோசனைகள்.

கொள்கையின் அடிப்படையில் எழுத்துகள் இருக்கையில், அந்த எழுத்துகள் நமது வாழ்வின் நீட்சியாக இருக்கவேண்டும்.

அதாவது, நான் இஸ்லாமியக் கொள்கைகளை எழுதினால், முதலில் நான் ஒரு நல்ல இஸ்லாமியனாக வாழவேண்டும். அப்படி இல்லாதவரையில் சும்மா வலைப்பூ இருக்கின்றதென்று ஏதோ எழுதுவதாகத்தான் பொருளாகும்.

உங்களுக்கு வளைகுடாநாடுகளின் மேல் அத்தனை வெறுப்பும், வளைகுடாவாழ் இந்தியர்களெல்லாம் அடிமைகளென்னும் நினைப்பும் இருக்கும் பட்சத்தில், நான் சில யோசனைகளைச் சொல்கிறேன்.

1.உங்கள் வலைப்பூக்களின் ஆங்கில ஆக்கத்தை இந்திய வெளிவிவகாரத்துறைக்கு அனுப்பி வைத்து உங்கள் எண்ணங்களைச் சொல்லி வளைகுடாவில் வாழும் அனத்து இந்தியரையும் திரும்பவும் இந்தியாவிற்கு அழைத்துக்கொள்ளச் சொல்லலாம்.

2.நீங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் வளைகுடா நாடுகளின் தூதரகங்களுக்கு ஒரு கடிதம் எழுதி உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்துகொண்டு, இப்படிப்பட்ட அடிமைத்தனமான வாழ்வை இந்தியர்களுக்குக் கொடுக்காதீர்கள் என்று கடிதம் எழுதலாம்.

3.உங்கள் நாட்டில் வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை உங்கள் வலைப்பூவில் அறிவித்து, பிரத்யோகமாக வளைகுடாவில் வாழ்பவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க நீங்கள் சிபாரிசு செய்யலாம்.

4.நீங்கள் வாழும் நாட்டின் வெளிவிவகாரத்துறைக்கு ஒரு கடிதம் எழுதி வளைகுடா நாடுகளிலிருக்கும் அவர்களது தூதரகங்களையும் அலுவலகங்களையும், வியாபார கேந்திரங்களையும் மூடிவிட்டு வரச் சொல்லலாம்.

5.அழகான ஆங்கிலத்தில் உலகெங்கும் வெளியாகும் அச்சு ஊடகங்களில் வளைகுடா எதிர்ப்பை உருவாக்க முயற்சி செய்யலாம்.

இவற்றையெல்லாம் செய்யாமல் சும்மாவேனும் வலைப்பூக்களில் அடிமை அடிமை என்று எங்களையெல்லாம் பார்த்து சொல்லிக்கொண்டும் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை.

நீங்கள் படித்தவர், நன்றாக யோசிக்கக்கூடியவர், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

டிமேட் அக்கவுண்டிற்காக விண்ணப்பம் செய்திருக்கிறீர்களா? அதில் எத்தனைகையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள்? எல்லாவற்றையும் படித்துப் பார்த்தீர்களா?

சிவாஜீ,

நல்ல வாதத்திறன் இருந்தால் டிமேட் அக்கவுண்டின் விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்துப் போட்டதையும் அடிமைச் சாசனம் என்று சொல்ல முடியும்.

இன்கம்டாக்ஸ் ரிடர்ன் படிவங்களைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா?

அது எதற்கு டி.ஹெச்.எல்.லின் பின்னால் உள்ள விதிகளைப் படித்துப் பார்த்திருக்கிறீர்களா?

எங்காவது ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு 'அடச்சே என்னய்யா இது கொடுமை' என்று வாதம் செய்யத் துவங்க முடியும் நண்பரே.

உங்கள் வாகனம் தொலைந்துபோய், திரும்பவும் சென்னை போலீசாரால் அது கண்டுபிடிக்கப்பட்டு அதனை எடுத்து வர கமிஷனர் அலுவலகம் போயிருக்கின்றீர்களா?

நகை தொலைந்துபோனதென்று என்றாவது புகார் கொடுக்கப் போயிருக்கின்றீர்களா?

சல்தா ஹை சிவாஜீ. எல்லா இடத்திலும் கொஞ்சம் முன்னே பின்னே சமாசாரங்கள் இருக்கத்தான் செய்யும்.

எல்லா இடங்களிலும் தொழிலாளர் பிரச்சனை உண்டு.

லாயிட்ஸ் சாலையில் அ.தி.மு.க. அலுவலகத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டருக்குள்ளாகவே இருந்த துப்புரவுத் தொழிலாளர்களின் காலனியைப் பார்த்திருக்கின்றீர்களா?

அதனாலென்ன தமிழர்கள் அனைவரும் துப்புரவுத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தினார்கள் என்று சொல்லிவிடமுடியுமா?

நான் என்ன எழுதினாலும், கடைசியில் என்னை அடிமைதான் என்று சொல்லப்போகிறீர்கள் :) சரி அதற்கென்று எதுவும் எழுதாமல் இருக்க முடியுமா?

உங்களுக்கு வேண்டுமென்பதை நீங்கள் பாருங்கள்; எனக்கு வேண்டுமென்பதை நான்.

துனியாமே ஹம் ஆயேன் ஹை ஜீனாஹி படேகா :)))

said...

பாலைவனத்தில் லேபர் கேம்ப் விஷயங்கள் சில நேரங்களில் சிலரை மனம் பிறழ்ந்து போகவும் வைத்திருக்கிறது.

முழுமையான சுதந்திரம் மிக மிக 'லக்சுரியான"விஷயம்.

நம்மவர் பலர் "கப கப" எனப் பசிக்கும் வயிறு(கள்)க்காக, சார்ந்திருக்கும் குடும்பத்தவரை நிமிர்ந்து வாழும்படிச் செய்யும் முயற்சியில் படுகின்ற அவஸ்தை / தியாகம்!

என்றாலும் சவூதி மாதிரியானதாக மனிதாபிமானமற்ற சட்டதிட்டமில்லாத இதர ஒரு சுமாரான நடைமுறைநாடுகளை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் இருந்தால் அங்கு வேலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

நடைமுறையில் இந்தியர்கள் எல்லோருமே சுதந்திரத்தை முதன்மையாகக் கருதி வேலையை/நாட்டினை/ வாழ்க்கையைத் தேர்வு செய்ய இயலாத சூழல் தானே இன்னும் நிலவுகிறது!

உங்கள் பதிவு ஒரு Caution advise! for those who have the fortune of choosing what they want!

நல்ல பதிவு.

said...

Dear friend,
The situation, working conditions, exit re-entry rules and labour laws are not yet changed in saudi. They are adding more new rules like saudization. It means every company has to appoint 10 to 40% of saudis in their company's workforce.Mostly they dont work and take more salary than expats.
Even now 99% employers hold their employees passport and create lot of troubles before vacation or permanent exit.Publishing photo in news papers is very comon.A ray of hope is Hon.Mr.vayalar ravi overseas indians affairs minister announced that a new MOU for labour recruiting process will be signed with GCC.this may change the situation.A recent incident: one of my office staff's mrs pregnent woman had some critical health problem.she needed experts treatment otherwise it could be serious. even loss of life. But she was refused treatment in superspeciality hospital because these type of hospitals for saudis not for expats. He could admit his mrs to that hospital after a lot of support from expats social organisation and ofcourse the most important our employers permission and approval.

said...

கிவியன்,

நான் லேபர் காம்பில் வாழவில்லை. நான் வசதியாக தான் வாழ்ந்தேன். அங்கே போவதற்கு முன் என்னென்ன ரிஸ்க்குகள் என தெரிந்தே போனேன்.

நான் என்னுடைய வசதியான வாழ்க்கை, கார், பங்களா பற்றி மட்டும் பார்க்கவில்லை. என்னுடன் வேலை செய்த இந்திய தொழிலாளர்களை சகோதரர்களாக பாவித்து அவர்களுடன் பழகினேன். அவர்களின் வலிகளை உணர்ந்தேன்.

கடைசிகாலத்தில் நான் தேவையில்லாத போது என்னுடன் அன்பாக பழகிய அரேபியர்கள் என்னை எப்படி நடத்தினார்கள். அவர்கள் மனதில் இந்தியர் என்றால் அடிமை என்ற நினைப்பை தவிர வெறொன்றும் இல்லை என நான் உணர்ந்தேன்.

நானும் என்னுடைய அனுபவங்களை மட்டும் எழுதினேன்.

கிண்டல்கள், தூற்றல்கள், தனிமனித தாக்குதல்கள், என் எழுத்தில் சந்தேகங்கள், என் ஜாதி மதத்தை காட்டி குத்தல்கள் வந்தன.

மூத்த வலைபதிவாளர் திரு ஆசாத் அவர்கள் நான் பார்ப்பது குறுகிய பார்வை என்றார்

மூத்த பதிவாளர்களான ஆசிப் மீரானும், இராமகியும் எனக்கு பாலன்ஸுடு பார்வை இல்லை என்றார்கள்.

அதானால் தான் கனடாவையும் சவூதியையும் ஒரே ஒரு முறை காம்பேர் செய்தேன்.

நான் ஒரு போதும் என் எதிரில் இருப்பவரை முட்டாள் என்றோ என்னை விட எளியவர் என்றோ கருதினதில்லை.

said...

திரு ஆசாத் அவர்களே,

அடிமை என்ற சொல் உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் மன்னிக்க. இனிவரும் பதிவுகளில் நான் அந்த சொல்லை உபயோகிக்க வில்லை.

//3.உங்கள் நாட்டில் வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை உங்கள் வலைப்பூவில் அறிவித்து, பிரத்யோகமாக வளைகுடாவில் வாழ்பவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க நீங்கள் சிபாரிசு செய்யலாம்.
//

இதை எங்களுக்குள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

மற்றவை நல்ல யோசனைகள். சில/பல கருத்தரங்குகளில் நான் கலந்து என்னைப் போன்ற பலருடன் பேசியிருக்கிறேன்.

இங்குள்ள மத்திய கிழக்கு ஏஜெண்டுகள் டிஸ்கிளெய்மர்களைப் போட்டுதான் வேலைக்கு அழைக்கிறார்கள்

//துனியாமே ஹம் ஆயேன் ஹை ஜீனாஹி படேகா :)))
//

இந்த உலகிற்கு வந்துவிட்டோம் வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்பது தான் இதன் அர்த்தமா?

said...

மனசு சார், உ.ம். என்றால் உதாரணம் என்பதின் சுருக்கம்.

ஜாலியாக ஆட நான் எழுதிய இந்த பதிவை
http://sivacalgary.blogspot.com/2006/06/blog-post_115047660262651535.html நீங்க ஆர்வமா பார்க்க ஒடி வந்தவர் தானே

said...

//என்னது நயன் தாராவுக்கு உம்மாவா... சிபி..........எங்கே?????????
//

ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!
பாசக் காரப் பயலா இருக்கியேப்பா மனசு!

:))

(சிவா, பதிவிற்குத் தொடர்பில்லாததுதான். தேவையில்லைஎன்று கருதினால் நிராகரித்து விடவும்)

said...

அருண்மொழி,

சிங்கப்பூரில் அடிமை முறை மறைமுக மாக அமல் படுத்தப் படுவது உண்மை.

ஆனால் வொர்க் பெர்மிட் காலபோக்கில் பீ ஆர் ஆக மாறி பின் குடியேற்ற உரிமையும் கிடைத்து விடுகிறது.

இவர்களை அமெரிக்கா விருந்தாளி வேலைக்காரர்கள் என ஹெச்1பி விசாவில் அழைத்து வந்து பிறகு காலப்போக்கில் கீரின் கார்ட் அளித்து பிறகு குடியுரிமை வழங்குகிறார்கள்

said...

சிவாண்ணே,
என்னை நண்பர்கள் லிஸ்டில் இணைத்ததற்கு நன்றி.

என்னுடைய வலைப்பக்கம்
http://mahendranmahesh1.blogspot.com அல்ல
சரியான தளம்
http://mahendranmahesh.blogspot.com

மேலும் அரேபியா பற்றிய உங்களின் கருத்திற்கு வலுசேர்க்க ஏதாவது வலைச்சுட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

said...

மகேஸ், உங்கள் வலைப்பக்க லிங்கை திருத்திவிடுகிறேன்.

என்னுடைய அனுபவங்களுக்கு என் வலைபக்கம்தான் சுட்டி.

அரேபியாவைப் பற்றி அறிய கூகுளித்துப் பாருங்கள்.

நிறைய கிடைக்கும்

said...

இனிய சிவாஜீ,

நன்றிகலள் அய்யா. எனது மனம் புண்படுவதால் இனிமேல் 'அடிமை' என்னும் வார்த்தையை உபயோகிக்கமாட்டேன் என்றதற்கு மிக்க நன்றிகள்.

இது குறித்து நான் எழுதியிருந்த தனிப்பதிவையும் null and voidஆக்கி ஒரு பின்னூட்டத்தையும் இட்டுவிட்டேன்.

தாங்கள் விரும்பினீர்களென்றால், அந்தப் பதிவை அழித்துவிடவும் சித்தமாக இருக்கிறேன்.

அன்புடன்
ஆசாத்

said...

திரு ஆசாத் அவர்களே,

You are Welcome.

நீங்கள் உங்கள் பதிவை எடுக்க வேண்டாம்.

என் மனம் நம் இந்திய சகோதரர்களால் அவ்வளவு சீக்கிரம் புண்படாது.

said...

சிவாஜீ, ஆஸாத்ஜீ ரெண்டு பேரும் டபக்குன்னு சமாதானமா போயிட்டீங்க.எனக்கு சப்புன்னு போயிடுச்சுங்கோ.உங்க ரெண்டு பேரோட புண்ணியத்தில சவுதி, கனடா தொழிழாழர்களின் வாழ்க்கை நானூறு பேருக்காவது தெரிஞ்ஜி இருக்கும்.என்னிய மாதிரி ஆசாமிங்கள்ளாம் ரொம்பவே சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கோமுங்கோ.
ஜெத்தாவுல சுளுவான வாழ்கைதான். கனடாவுல வேலைவாய்ப்பு சம்பந்தமா ஏதோ உதவி செஞ்ஜிகிட்டு இருக்கிறதா போட்டிருந்திங்க. அதை எல்லாம் விவரமா தனி பதிவா போடுங்க.என்னிய மாதிரி மாற்றம் விரும்பும் சின்ன பசங்களுக்குலாம் உதவியா இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

said...

முரளி, நீங்கள் வெல்டிங் இஞ்ஜீனியர் என்று படித்தாக ஞாபகம்.

கனடாவில் குடிபெயர WWW.CIC.GC.CA என்ற வலையை பார்க்கவும். குடியேற்ற உரிமை பெற 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை ஆகும்.

குடியேற்ற உரிமை கிடைத்தவுடன் நம்மவருக்கு வேலைக் கிடைக்க என்னைப் போன்ற பல நண்பர்கள் உதவ இருக்கிறார்கள்.

நீங்கள் பெட்ரோலிய துறையில் இருந்தால் மிக சீக்கிரம் வேலைக் கிடைத்துவிடும்

said...

நான் பிரயயோகித்த சில வார்த்தைகள் திரு ஆசாத் அவர்களின் மனதை மிகப் புண்படுத்திவிட்டது.

அதனால் நான் வருந்துகிறேன். மன்னிப்பு கோருகிறேன்

அந்த வார்த்தைகளை இந்த பதிவிலிருந்தே தூக்கிவிட்டேன். இனிமேல் உபயோகிப்பதை தவிர்க்கிறேன்.

நான் இட்ட பின்னூட்ட்ன்களில் அந்த வார்த்தை உள்ளவைகளை அழித்து விடுகிறேன். மற்றவர்களின் பின்னூட்டதில் உள்ளவைகளை எப்படி எடிட் செய்வதென்று தெரியவில்லை

said...

Thanks a lot Mr. Siva jee,
I will go through the website mentioned by you. Yes you are right, i am a mechanical engineer but experienced more in welding field. I am not in petroleum industry but petroleum industries are also in my customers list. I am in industrial marketing, specialized in welding consumables,welding machines and plasma cutting m/cs.Thank you once again.
With love and regards,
B. Murali Daran.

said...

Murali, If you are in Marketing an MBA degree will help a lot. But in Saudi you may not have any institutes.

In Dubai or in Bahrain you may have som inistitutes.

A word of caution. Marketing is much different in this part of the world. They are more competent and talentate in marketing.

What they expect is technical competency which they lack here.

said...

சிவா,

..
இதைப் பற்றிக் கேட்டால் "இங்கே அவர்கள் வந்தது வேலை செய்யதான்.. அவர்களுக்கெதுக்கு பொழுது போக்குகள்" என அரேபிய முதலாளிகள் கூறுவார்கள்.
..

இந்த லேபர் கேம்ப் பற்றி சிரியான படத்தில் காண்பித்தார்கள். அதில் கஷ்டப்படும் பாகிஸ்தானி இளைஞர்களை முல்லாக்கள் எப்படி தற்கொலைப்படைகளாக மூளைச்சலவைச் செய்கிறார்கள் என்று.

said...

Human Trafficking & Modern-day Slavery in Kingdom of Saudi Arabia
http://gvnet.com/humantrafficking/SaudiArabia.htm

Exploitation and Abuse of Migrant Workers in Saudi Arabia
http://hrw.org/mideast/saudi/labor/

http://www.omdurman.org/whitslav.html
Saudi Arabia holds female American citizens in white slavery:

http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Saudi_Arabia

http://www.sauduction.com/welcome.html

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

Dearl Bloggers, Fellow Blog Readers and Commenters,

We all should THANK Siva for his Arabian Experience episode and it really helps us that some of us had already made our minds not to turn our face towards middle east. At the same time, let us all hope and expect Siva's view and suggestions to NRI's in Cananda "How to stop a NRI daughter become a prostitute and a son become a drug carrier?" and also his suggestions to RCMP "How to keep the NRI women off the streets?"

said...

திரு அபிராமம்,

கனடாவில் யாரும் யாரையும் நிர்பந்த படுத்தவில்லை.

ஒருவர் கிரிமினல் ஆவதும் விபசாரி ஆவதும் அவரவர் கையிலே.

NRI கள் இங்கே வந்து அமைச்சர் ஆகியிருக்கீறார்கள் கிரிமினலும் ஆகியிருக்கீறார்கள்.

அதுசரி நான் என்ன எழுத வேண்டும் என்ன வார்த்தைகள் போடவேண்டும் என்று ஆளுக்கு ஆள் அட்வைஸ் செய்கிறீர்களே. இது என்ன கருத்து சுதந்திரம்?

கனடாவைப் பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை நீங்கள் எழுதங்களேன். யார் வேண்டாமென்றார்கள்

said...

ஆரோக்கியம்,

நான் எழுதுவது ஒரு துளி தான். இந்த மாதிரி கூகுளில் தேடினால் கோடிக் கணக்கில் கிடைக்கும்.

நம் அறிவிசீவி பதிவாளார்கள் அவர்களாகவே இதை எல்லாம் படித்து பிறகு மறந்து என்னிடம் வந்து ஜல்லி அடிப்பார்கள்.

said...

Siva, you have every rights what to write and what not to write and I (we)don't have any rights on you at all. But at the same time, it would be balanced if you write about NRI kids in Canada otherwise your only intention is TO ATTACK MUSLIMS - ISLAM NOT AN EYE OPENER TO FELLOW INDIAN.

said...

ஒருவர் கிரிமினல் ஆவதும் விபசாரி ஆவதும் அவரவர் கையிலே.

Do you mean that we shoudn't blame the entire community / race / ethinicity?

said...

//3.உங்கள் நாட்டில் வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை உங்கள் வலைப்பூவில் அறிவித்து, பிரத்யோகமாக வளைகுடாவில் வாழ்பவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க நீங்கள் சிபாரிசு செய்யலாம்.
//

இதை எங்களுக்குள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

மற்றவை நல்ல யோசனைகள். சில/பல கருத்தரங்குகளில் நான் கலந்து என்னைப் போன்ற பலருடன் பேசியிருக்கிறேன்.

Siva, please include "NRI" related issues as an agenda while you meet those people who are having same VIEWS like you.

said...

சிவா,
நான் எடுத்துக்கொடுத்த இணைப்புகள், சவூதி அரேபியாவில் இன்னமும் அடிமைமுறை இருக்கிறது என்பதைக்காட்டத்தான். ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ந்தபின்னாலும் அடிமை முறையை வைத்திருந்த ஒரே நாடு அது. 1967இல் தான் அந்த அடிமைமுறையை அதிகாரப்பூர்வமாக சவூதி அரேபியா நீக்கியது. அதிகாரப்பூர்வமாக அதனை நீக்குங்கள் (உள்ளே வைத்துக்கொள்ளுங்கள்) என்று அறிவுரை கொடுத்தது அமெரிக்கா. ஆனால், இன்னமும் சவூதி அரேபியா போஷிக்கும் இமாம்கள் ஷேக்குகள் ஆகியோர் அடிமைமுறை இஸ்லாமின்பிரிக்க முடியாத அங்கம் என்றே பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கான செய்தியும் இணைப்பும் என் பதிவில் இருக்கிறது. அடிமை முறையின் கீழ் அடிமைகளாக இருப்பவர்கள் வேறு, உங்களைப்போன்ற மைக்ரண்ட் வேலையாட்களை "அடிமை போல" நடத்துவது என்பது வேறு. இருப்பினும் வருவது ஒரே மைண்ட்செட்டிலிருந்துதான். ஆகவே அடிமை என்ற வார்த்தையை நீங்கள் நீக்கியது தவறு என்பது என் கருத்து. வேலை நேரம் போக மீத நேரங்களில் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் குறுக்கிட்டு எதனை அவன் செய்யவேண்டும் என்று ஆணையிடுவது அடிமை முறைதான். நேற்று சோமாலியாவில் இஸ்லாமிய ராணுவம் முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. முதல் ஆணை என்ன தெரியுமா? யார் யாரெல்லாம் ஐவேளை தொழுகை செய்யவில்லையோ அவர்களுக்கெல்லாம் மரண தண்டனை என்ற அறிக்கைதான். இந்த மதம்தான் சகிப்புத்தன்மை, அமைதி மார்க்கம் என்று இங்கே அப்பாவி மக்களை ஏமாற்றி பீலா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

ஆரோக்கியம், அடிமை என்ற வார்த்தையை நான் எடுத்தது. ஆசாத் என்ற் தனி மனிதரின் மன உணர்ச்சியை மதிப்பளிக்கத் தான். தனி மனித உணர்ச்சிக்கு அதிகம் மரியாதை தருபவன் நான்.

ஆனால் அரேபியர்கள் மற்றவர்களை அடிமைக்களாகத் தான் நடத்துகிறார்கள் என்ற என்னுடையக் கருத்தில் சிறிதளவும் மாற்றம் இல்லை.

அவர்கல் சில வேலைக்காரர்களிடமும் வியாபாரிகளிடமும் நன்றாக பழகினாலும் அவர்கள் உள் மனதில் வன்மம் இருக்கிறது என்பது என் அனுமானம்

said...

அபிராமம்,

சமுதாயம் நலம் பெற கனடா என்ற நாடு அளிக்கும் சலுகைகள் உலகில் முதல் தரம் வாய்ந்தவை.

ஏதோ பேப்பரில் வரும் செய்திகளைப் படித்தும் கூகுளில் தேடி வெட்டி ஒட்டியும் அறிவாளி பட்டம் பெறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

கனேடிய விபசாரிகளைப் பற்றி எழுத என்னால் முடியாது. ஏனென்றால் எனக்கு விபசாரிகளை சந்தித்த அனுபவமோ இனிமேல் சந்திக்கும் எண்ணமோ இல்லை.

நீங்கள் சொல்வது பார்த்தால் இங்குள்ள விபசாரிகள் எல்லாம் இந்திய பெண்கள் என்பது போல் இருக்கிறது. அது உண்மை அல்ல. இதற்காக நான் வாதம் செய்ய தயார்.

அல்லது இந்திய குழந்தைகள் டேட்டிங் செய்து மணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக் கொள்வதை விபசாரம் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறானக் கருத்து அதற்கும் தனி பதிவிட்டு வாதம் செய்ய தயார்

நான் அரேபியரை பற்றி எழுதுவது முஸ்லிம்களை தாக்கதான் என் நீங்கள் சொல்வது அரேபியர்கள் மட்டும் தான் முஸ்லிம் என்ற கருத்தை வைக்கிறீர்கள். உங்களின் கருத்து அதென்றால் அதுவும் எனக்கு உடன்பாடே

என் அரேபிய அனுபவத்தில் என் அனுபவத்தை மட்டும்தான் எழுத முடியும். நான் நடுநிலைமை வாதி என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை.

said...

அல்லது இந்திய குழந்தைகள் டேட்டிங் செய்து மணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக் கொள்வதை விபசாரம் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறானக் கருத்து அதற்கும் தனி பதிவிட்டு வாதம் செய்ய தயார்

Siva, I am against you in your above mentioned views.

நான் அரேபியரை பற்றி எழுதுவது முஸ்லிம்களை தாக்கதான் என் நீங்கள் சொல்வது அரேபியர்கள் மட்டும் தான் முஸ்லிம் என்ற கருத்தை வைக்கிறீர்கள். உங்களின் கருத்து அதென்றால் அதுவும் எனக்கு உடன்பாடே

No I didn't mean like that.

Can I have your comment on my comments regarding returning back after the expiry of Exit - Reentry visa and absconding ad?