Friday, July 14, 2006

இரண்டே இரண்டு வீரர்களுக்காக....

இரண்டே இரண்டு வீரர்களுக்காக இஸ்ரேல் லெபனானை தாக்குகிறது. லெபனானின் தீவிரவாத அமைப்பான ஹெஸ்பொல்லா இரண்டு இஸ்ரேலிய இராணுவவீரர்களை கொல்லவில்லை கடத்திதான் இருக்கிறது. அதற்காக லெபனானின் மீது விமான தாக்குதல் இஸ்ரேல் நடத்தியுள்ளது. மேலும் ஹெஸ்போல்லாவை அடக்கும் வரை ஓய்வதில்லை என சூளுரைத்துள்ளது

வழக்கமாக வரும் புளுகல் புலம்பல் லெபனான் அரசாங்க மிடமிருந்து. "எங்களுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கு சம்பந்தமில்லை. ஆனால் ஹெஸ்பொல்லா எங்கள் நாட்டில் உள்ளார்கள் அவர்கள் இருக்கும் ஏரியா எங்களின் அதிகாரத்தில் இல்லை".

புஷ்ஷிடம் லெபனான் கதறல். உலக நாடுகளின் தோளில் சாய்ந்து கண்ணீர்

ஏதோ வழக்கமாக கேட்கும் வசனமாக இருக்கிறாதா?

அதாங்க நம்ம முஷ்ராப் அடிக்கடி புலம்புவார்.

"எங்கள் நாட்டில் தீவிரவாதிகளே இல்லை ஆனால் அவர்கள் இந்திய எல்லையை தாண்டியவுடன் இந்தியாவின் ஆளாதிக்கமும் ஆணவமும் அவர்களை தீவிரவாதிகளாக மாற்றிவிடும். அதற்கு நான் பொறுப்பா?"

இந்த உளவாளி ஜெனரலுக்கு நம் நாட்டு அறிவுசீவி பத்திரிக்கைகள், டீவிகள் நல்ல கவரேஜ் தரும்.



இஸ்ரேலின் சீற்றம் அறச்சீற்றம்........

நம்மாட்கள்.........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

44 comments:

said...

சிவா, நான் இன்று போட வேண்டும் என நினைத்திருந்த பதிவு.

தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல நெறி கட்டுமா?
நெறி கட்டியிருக்க வேண்டும் சிவா.

மும்பையில் குண்டு வெடித்த அடுத்த அரை மணி நேரத்திற்குள்
இந்திய ராணுவம் முசாபராபாத் மீது தாக்குதல் தொடங்கியிருந்தால் அடுத்த முறை குண்டு வைக்கும் முன்பு ஒரு நிமிடம் யோசிப்பான்.

said...

விடுதலைப் புலிகள் ஒரு சிங்கள ராணுவ வீரரைக் கொல்கிறார்கள். தமிழகக் கடற்கரைகளில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் உள்ளது என்று இலங்கை (அல்லது அதற்கு ஆதரவாக அமெரிக்கா/சீனா), தமிழ் நாட்டின் மீது குண்டு வீசுகிறது. தமிழக அரசு புழுகல் புலம்பலாக எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறது.

எப்படி இருக்கும்?

எங்காவது போய் யார் மீதாவது குண்டு போடுவது என்றால் எவ்வளவு எளிதாகப் பேசி விடுகிறோம். அந்தக் குண்டுகள் என் ஊரான நாகர்கோவிலில், என் அம்மா அப்பா வசிக்கும் பகுதியில் விழப் போகின்றன என்று நினைத்துப் பார்த்தால் விளைவுகள் சரியாகப் புரிகின்றன.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

கொஞ்சம் பிரதமருக்கும், சோனியாவுக்கும், முலாயமுக்கும், கருணாநிதிக்கும் இன்ன பிற போலி மதச்சார்பிண்மைவாதிகளுக்கும் உப்பை பார்சலாக அனுப்பலாம்.

said...

அறிவுசீவி பதிவர்களை விட்டுட்டீங்களே?!

said...

அண்ணன், நீங்க சொல்வது உண்மை தான். மன்மோகன் சிங்கின் பேட்டியை படித்தீர்களா? இது மாதிரி பேட்டிக் கொடுத்தா, அவனுங்களும் எப்படி நம் மேல் பயம் வரும்.

பாக். ஒரு படி மேலே போயி, காஷ்மீர் பிரச்சனை தீர்ந்தால் தான் இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடக்காது என்று வெளியுறத்துறை அமைச்சர் சொல்லுறார்.
எங்கப்பன் கூதிருக்குள் இல்லை என்பது மாதிரி உள்ளது

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஒரு திம்மித்துவாவாதியின் பதில்:

வாங்க...வாங்க....

இப்ப இது ஒண்ணு தான் கொரச்சல்...இஸ்ரேலுக்கு காவடி தூக்குறதுக்கு முன்னாடி பழனி முருகனுக்கு காவடி தூக்குங்க...

மும்பை குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் காரணம் அல்ல...

ஆர் எஸ் எஸ் தான் காரணம்...ஹரிச்சந்திரன் வம்சம் அர்ஜுன் சிங் சொல்லியிருக்கிறார்.

சூனாமிக்கு யார் காரணம் தெரியுமா...? இந்து பாசிசம் தான் காரணம்...

நாய்கொலெச்சான் பட்டியில் நாய் கொலைக்கலையாம்...அதுக்கு யார் காரணம் தெரியுமா...?
ஆர் எஸ் எஸ் தான்...!

said...

அதுதான் ஏக்கப் பெருமூச்சு விட்டாச்சே. விடுங்க. நாம எல்லாம் நடுநிலமை நாடு. அதனால அப்படித்தான். இது எந்த ராமன் வந்து ஆண்டாலும் ராவணன் வந்து ஆண்டாலும் மாறாது.

said...

1992 குண்டு வெடிப்புக்கு தாவுத் இப்ராகிம் தான் காரணம் என்று அறியப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் கூட இந்திய அரசு இன்னும் பாகிஸ்தானிடம் அவரை ஒப்படையுங்கள் என்று கெஞ்சி கொஞ்சி கொண்டிருக்கிறது.இதே இஸ்ரேலாக இருந்தால் டாவுத் எந்த நாட்டில் இருந்தாலும் இன்நேரம் முடித்திருப்பார்கள்,அந்த தைரியம் தான் அவர்களை மேற்கு கரையில் இன்னமும் உட்கார வைத்திருக்கிறது.

இங்கே என்னெவென்றால் இந்திய கேபினட் கூட்டம் போட்டு வெட்டி கதையும் அறிக்கையும் விடுகிறார்கள்,நாங்கள் மும்பையை பாராட்டுகிறோம் என்று.

திருந்தாத ஜென்மங்கள்...

said...

வாங்க சிவகுமார்

உங்களை மாதிரி பேசுபவர்களைதான் அறிவிசீவி என்று அழைப்பது.

தமிழ்நாட்டுக்கு வருவது அகதிகள் அப்பாவி மக்கள்.

சிங்கள வீரனை புலிகள் பிடித்தால் இலங்கையின் வடக்கேதான் குண்டு போடுவார்கள்


இஸ்ரேலின் கொடுமை தாங்காமல் இஸ்ரேலியர்கள் லெபனானில் அகதிகளாக செல்லவில்லை.

இஸ்ரேல் என்ற நாட்டையே அழிக்கக்தான் அரபு நாடுகள் போரிடுங்கின்றன. அவர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவர்தான் இஸ்ரேலியர்

இஸ்ரேல் உடன் காஷ்மீர் மற்றும் இலங்கை பிரச்னைகளை ஒப்பிட்டு பார்த்து நியாயம் பேசுவதுதான் அறிவிசீவி வேலை என்றால் நான் அறிவுசீவி அல்ல. பார்க்க என் என்னுடைய ப்ரொபைலை

said...

அந்த பிஸ்கோத்து அர்ஜூன் சிங்-க்கு (என்னா பேருடா) எனக்கு ஒன்னு தான் சொல்ல முடியுது. "அது என்ன மாப்பு வெட்கப்படாம சொல்லிட்ட?" - கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்.

said...

சிவா, பாகிஸ்தான் நாட்டு மந்திரி சொல்வதை இங்குள்ள பகுத்தறிவு பதிவாளர் திருவீரமணி அவர்கள் ஆஹா உணமை...உண்மை என புளகாங்கிதம் அடைகிறார்

said...

வஜ்ரா,

இந்த அர்ஜூன்சிங்தான் இவர்களின் புஜ்ஜுக் குட்டி

திம்மிகளின் தானைத் தலைவர்

said...

மா. சிவகுமார் சார்,

நீங்க இடது சாரி சிந்தனை உள்ளவர் தானே...இஸ்ரேலிய இடது சாரிக்கட்சி தான் இப்போது ஆட்சியில் உள்ள ஓல்மர்ட் மந்திரி சபையில் இரண்டாவது பெரிய கூட்டணிக்கட்சி. அமீர் பெரெட்ஸ் முத்திரை இடது சாரி. அவர்தான் தற்பொழுதய ராணுவ மந்திரி..என்ன வினோதம்...!! அவர் தான் ஹெஸ்பொல்லாக்களை போட்டுத்தாக்கு என்று கையெழுத்திட்டவர்.

இந்த இஸ்ரேலிய இடது சாரிகளைப்பார்த்தாவது திருந்த மாட்டீங்களா?

said...

கொத்தனார்.. வலிக்குது... கொத்தனார்

எத்தனை நாளைக்குத்தான் நடுவிலே நின்னு அடி வாங்குகிறது.

நானும் கொஞ்சம் விலகி நின்னு சாத்துறேனே

said...

வாங்க சாமி,

அதுக்கும் ஒருபடி மேலே போயி எதிர்க்கட்சி தான் காரணம் என சொல்லவந்துட்டாங்க இந்த அர்ஜீன்சிங்குகள்

இவர்களின் பேச்சை பார்த்து தீவிரவாதிகளுக்கு கூட வெட்கம் வந்து

"சீ இனிமேல் இந்தியாவில் குண்டு வைக்க கூடாதுயா. நம்ம வச்சா காக்கி டவுசர் போட்ட ஓல்டுகளுக்குகெல்லாம் பேர் கிடைக்குக்து பார்"

என இனிமேல் குண்டு வைக்க மாட்டார்கள்

said...

கேட்டீங்களா...கேட்டீங்களா...

"தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு" - அமெரிக்கா.

said...

இதே போல் அமெரிக்கா

"இந்தியா தன்னைப் பாதுக்காத்துக் கொள்ள அதற்கு உரிமை உண்டு"

என சொல்லும் நாள் அதிக தூரமில்லை ஜென்டில்மேன்

said...

""இந்தியா தன்னைப் பாதுக்காத்துக் கொள்ள அதற்கு உரிமை உண்டு"

என சொல்லும் நாள் அதிக தூரமில்லை ஜென்டில்மேன்"
நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் சிவா. அவங்க சொல்ல மாட்டாங்க நாம தான் சொல்ல வைக்க வேண்டும்.

said...

சிவா சார் இந்த வீரமணி மேட்டர் எனக்கு தெரியாம போயிடுச்சே.
கன்னட பெரியாரு பரங்கியருக்கு சாமரம் வீசினாரு அவரு சிஷ்யன் பாகிஸ்தானுக்கா?.
என்னே பகுத்தறிவு பிழைப்பு!.
பேஷ் பேஷ் ரொம்ப பிரமாதம்.
பாயர பார்ப்பான்,
பா. முரளி தரன்.

said...

சந்தோஷ்,

அந்த அர்த்ததில்தான் நானும் சொன்னேன்.

அமெரிக்காவை(அதனால் உலகை) இந்தியாப்பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தது நமது அரசாங்கமோ இல்லை நம் கலாசாரமோ அல்ல.

நம் மென்பொருள் சகோதரர்களும் / சகோதரிகளும் தான் (இதில் மேல்சாதி, கீழ்சாதி, ஆரியன், திராவிடன், தாடி, காவி, பெரும்பான்மையோர், சிறும்பான்மையோர், உயர்த்தபட்டோர், தாழ்த்தப்பட்டோர் என எல்லாரும் அடங்குவர்)

அதே மென்பொருளார்கள்தான் அமெரிக்காவை இந்தியாவையும் இணைக்க வைக்கபோகிறார்கள்

பி.கு. நான் மென்பொருளான் அல்லன்.

said...

"அறிவு சீவி"
"இடது சாரி சிந்தனையாளன்"

முத்திரை குத்தி விட்டால் விவாதிப்பது எளிதாகி விடுகிறது இல்லை? சிவா, ஷங்கர் - நான் கேட்டதற்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள், மக்கள் தமிழ் நாட்டில் ஏராளம் உள்ளனர். எனக்குக் கூட அனுதாபங்கள் நிறைய உண்டு. அதை முன் வைத்து இலங்கை அரசு அல்லது அதற்கு ஆதரவாக அமெரிக்கா நமது பெற்றோர் வசிக்கும் கிராமத்தில், பகுதியில் குண்டு வீசினால் உங்கள் நிலை என்ன?

தீவிரவாதிகள் செய்த தவறுக்காக பொதுமக்களைக் கொல்லும் உரிமையை இசுரேலுக்கு யார் கொடுத்தது? அந்தப் போக்கு மாறும் வரை இடது சாரியோ, வலது சாரியோ யார் ஆண்டாலோ, இசுரேல் தனது பாவங்களுக்காக வருந்திக் கொண்டேதான் இருக்கும். கோத்ராவில் தீ வைத்த கும்பலுக்கு தண்டனையாக குஜராத் எங்கும் அப்பாவி முஸ்லீம்களைக் கொன்றது போல, இந்திய அரசும் பாகிஸ்தான் மீது குண்டு வீச வேண்டும் என்பதுதான் உங்கள் நிலையா?

வட்டங்களுக்குள் அடைந்து கொண்டு பிறரையும் அப்படியே அடைத்துக் கொண்டு சிந்திப்பதையும் பேசுவதையும் விட்டு நல்லதை நடப்பதைச் சிந்தியுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?

ஹிஸ்புல்லா ஏவிய ராக்கெட்டுகளால 12 இஸ்ரேலியர்கள் மரனம் அடைந்துள்ளார்கள்.ஆயிரகனக்கான இஸ்ரேலியர்கள் உயிருக்கு பயந்து பதுங்குகுழிகளில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.இதை பற்றி எந்த கிரிட்டிகும் வாய் திறக்கவில்லை.

said...

சிவா,

உறுதியான நிலைப்பாடின்மைக்கு பெரும்பான்மை பலம் இல்லாத அரசும் ஒரு காரணம்.

எப்படியும் நமது மக்கள் தீவிரவாதத்திற்கு ஆயிரக்கணக்கில் பலி ஆகிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆண்டுதோறும்.

உறுதியான தீவிரவாத எதிர்ப்பில் இதர தீவிரவாதிகளால் பாதிக்கப்படும் நாடுகளின் contemporary policy-ஏ தீவிரவாதிகளின் பயிற்சிப் பட்டறைகள் மீதான் "Pre-emptive" strike"தானே?

இல்லை இந்திய அரசும், இந்திய அரசியல் தலைவர்களும் இந்தியா திவீரவாதிகளால் "அந்தளவுக்கு" பாதிக்கப்படவில்லை என்று நினக்கிறார்களா?

இந்தியா இந்த மந்தத்தனத்திலிருந்து விடுப்டுவற்காகவாவது தீவிரவாதிகள் சில அரசியல்வாதிகளை முறுறுகையிட்டுச், சிறைபிடித்து அல்லது கொன்றால் கூட அது பரவாயில்லை.

இரண்டு லட்சத்திற்கும் மேலான பொதுமக்களை தீவிர வாதத்திற்குப் பலி தந்த சுயநல அரசியல் வாதிகளுக்கு அது தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம்.

said...

மா சிவகுமார் சார்,

உங்களை நான் முத்திரை குத்த வில்லை. அந்த சிந்தனைஉள்ளவர் என்று நீங்கள் தான் சொல்லியிருந்தீர்கள். உங்கள் பதிவுகள், என் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் வைத்துத் தான் அப்படிச் சொன்னேன்.

இப்போது முத்திரை என்று வட்டத்தில் சிக்காமல். அப்பாவி லெபனான் மக்களை காவு வாங்கும் இஸ்ரேலைக் குறை சொல்லி என்ன பயன்? அந்த அப்பாவிகள் ஒன்றும் செய்யாமல் வளரவிட்ட ஹெஸ்பொல்லாக்களை அல்லவா நீங்கள் குறை சொல்லவெண்டும்...

தீயுடன் விளையாடாதே சுட்டுவிடும் என்று ஹெஸ்பொல்லாக்களைக் குடியமர்த்தி ஆட்சி பீடத்தில் ஏற்றிய அப்பாவிகள் எச்சரித்திருக்கவேண்டுமல்லவா...?

அப்புறம், இதை இப்படிப்பார்த்தால் என்ன...

இஸ்ரேலின் லெபனான் தாகுதல், லெபனான் மக்களை ஹெஸ்பொல்லாக்களிடமிருந்து விடுவிக்கவே இஸ்ரேல் செய்கிறது என்று...?

பிரச்சனை, வட்டம் போட்டு யோசிப்பது, கட்டம் போட்டு கலக்குவது அல்ல. இன்று இரண்டு பேரைக்கடத்தும் தைரியம் வந்த தீவிரவியாதிகளுக்கு நாளை கையில் ballistic missile இருந்தால் என்ன செய்வார்கள்.? இஸ்ரேலிடம் விளையாடக்கூடாது என்கிற பயம் வேண்டும்...அதைத்தான் செய்கிறது...ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிப்பான்...அடுத்த கட்ட நடவடிக்கைக்கு...

இப்போழுது ஹெஸ்பொல்லாக்கள் ஏன் இஸ்ரேல் ராணுவ வீரர்களைக் கடத்தினர்? சும்ம பொழுது போகவில்லை என்றா? இஸ்ரேல் அரசு தேமே என்று நடுனிலையாக உயிருடன் பிடித்த அதி பயங்கர தீவிரவாதிகளை விடுவிக்கக் கோறுவதற்குத் தானே?

said...

இப்போ சரியாகச் சொல்கிறீர்கள் ஷங்கர். கண்ணுக்குக் கண் என்று ஆரம்பித்தால் "தேவர் மகன்" போல ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இவர்களைச் சிறை வைத்ததால், அவர்கள் கடத்த, அவர்கள் கடத்தியதால் இவர்கள் டாங்கி அனுப்ப, அவர்கள் டாங்கி அனுப்பியதால் இன்னொருவர் தற்கொலைத் தாக்குதல் செய்ய.. என்னதான் முடிவு இதற்கு.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு இருக்கும் எந்த வித பொறுப்புத் தன்மையும் இசுரேலுக்கு இல்லை. அடிப்படையிலேயே தவறில் ஆரம்பித்த அவர்களது வரலாறு, தொலை நோக்கு உள்ள ஒரு தலைவரின் கீழ் அந்த மக்கள் துணிச்சலாக மாற்றானையும் மனிதனாக மதிக்க ஆரம்பிக்கும் வரை இந்தத் துன்பங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இவன் சரி, அவன் தவறு என்று நாம் விவாதிப்பது அது வரை பொருளற்றதாகவே இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

இரண்டு ராணுவ வீரருக்கு பதிலாக நூற்றுக்கணக்கான மக்களையும் பிள்ளைகளையும் கொன்ற நாடெல்லாம் ஒரு நாடா? காரி முகத்தில் உமிழ வேண்டும்.


அப்பாவி பொது மக்களை யார் கொன்றாலும் அவர்கள் எனது பார்வையில் தீவிரவாதிகளே அது இஸ்ரேலாக இருந்தாலும் சரியே

said...

மின்னல், "அப்பாவி "மக்கள் ஒவ்வொருவராக வந்து எங்கள் அப்பாவி மக்களை 10/15 பேர்களை கொல்லுவார்கள்.

நாங்கள் சும்மா இருக்கவேண்டும் அதுதானே உங்கள் கொள்கை நல்ல கொள்கை கடைபிடியுங்கள்

said...

சிவகுமார், முத்திரை குற்றவது என் வழக்கமல்ல.

நீங்கள் சொல்வது முற்றிலும் தவறனா கற்பனை.

விடுதலை புலிகள் இலங்கையிலிருந்து இலங்கை அரசுடன் மோதுகிறார்கள்
அவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்களை அளித்து தவறு செய்து அதன் பலனாக ராஜிவ் காந்தியை பலி கொடுத்தார்கள்.

ஒரு இஸ்ரேலிய தலைவரை ஹெசபொல்லாவோ அல்லது ஹமாசோ கொன்று இருந்தால் அந்த அமைப்பே இருந்திருக்காது.

விடுதலை புலிகள் இந்தியாவிலிருந்து இலங்கை மேல் போர் நடத்தினால் இலங்கை அரசு இந்தியாவை அவர்களை விரட்டும் படி கேட்கலாம். இந்தியா கேட்காவிட்டால் இலங்கையை பாதுகாக்க இந்தியாவில் இருக்கும் பயிற்சி முகாம் களை தகர்க்கலாம், அதில் தவறே இல்லை.
ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள் என்று பக்காவாக நீருபணமாகியும் அவர்களை விட்டு வைத்ததுதான் இந்தியா செய்த தவறு.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானை செய்தது போல் செய்திருக்க வேண்டும்.

முதலில் நாடு பிறகுதான் மதம் இனம் எல்லாம். நம்மில் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நம் நாட்டு உப்பை தின்று நம்மையே அடிக்கும் இலங்கை தீவிரவாதிகள், காஷ்மீர் தீவிரவாதிகள் பங்களாதேசிகள் இவர்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் அது தான் நியாயம்

அவர்கள் தமிழ் பேசுபவர்கள் இந்தியா வம்சாவளியினர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் செய்வது எல்லாம் சரியாகி விடாது.

அப்பாவி அகதிகளுக்காக இந்தியா செய்யும் செலவு அதிகம். அந்த அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி வெடிகளை வைப்பவர்கள் பேடிகள் இல்லாமல் வேறன்ன?

மொழி/இனம்/மானம் இந்த மாதிரி உணர்ச்சிகள் ஓட்டு பிச்சைகாரர்களுக்கு ஒரு கருவி அவ்வளவுதான்.

அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள் புஷ்யும் கெர்ரியும் எதிரெதிர் கட்சிகள். ஆனால் புஷ் வெளிவிவகாரத்தில் எடுக்கும் ஒவ்வொரு கருத்திற்கும் ஆதரவாக கெர்ரி பேசுவார் அதுதான் நாட்டுப் பற்று.

என் நாட்டுக்கு குந்தகம் விளைப்பவர் என் உடன் பிறந்த சகோதரனாக இருந்தாலும் அவனும் என் எதிரியே

said...

என் நாட்டுக்கு குந்தகம் விளைப்பவர் என் உடன் பிறந்த சகோதரனாக இருந்தாலும் அவனும் என் எதிரியே
-Calgary சிவா

Calgary சிவா, உங்கள் நாடு எது?

said...

நான் இப்போது செய்வது விதண்டாவாதம் !!
விடுதலை புலிகள் இலங்கையிலிருந்து இலங்கை அரசுடன் மோதுகிறார்கள்.அவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்களை அளித்து தவறு செய்து அதன் பலனாக ராஜிவ் காந்தியை பலி கொடுத்தார்கள்.
ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள் என்று பக்காவாக நீருபணமாகியும் அவர்களை விட்டு வைத்ததுதான் இந்தியா செய்த தவறு.
- இந்தியா தவறு செய்தது. தண்டனையும் பெற்றது.... சரி.... விடுதலை புலிகளை எதுவோ செய்து திரும்ப .... தவறு+1 ஆக்கவா?

said...

பின்னூட்டி, என்னுடைய நாடு எதுவாய் இருக்கும் என நினைக்கிறீர்கள்.

said...

வாங்க வழிப்போக்கன்,

அங்கே புலம்ப வேண்டியதை இங்கே புலம்புகிறீங்களே சாமி.

அவர்கிட்டே நின்னு ஆடுங்க...


இதுக்கெல்லாம் எதுக்கு சார் ரெக்கமெண்டஷன்

said...

Israel -
POPULATION: 7 million (less than half of Mumbai)
SIZE: Less than that of Kerala
ACT OF VIOLENCE AGAINST IT: 2 soldiers kidnapped by Hezbolla, 1 by Hamas
RETALIATORY ACTION: war on Lebanon and Gaza
Leadership: Ehud Olmert - Strong leader who believes in punishing the enemies for their misadventures.

India -
POPULATION: 1 billion+
SIZE: 6th largest in the world
ACT OF VIOLENCE AGAINST IT: 200+ dead in Mumbai blast, 8 in Kashmir
RETA LIATORY ACTION: a speech by PM
Leadership: Manmohan Singh - A puppet prime minister controlled by lady whose sole qualification for being the master-PM is her being widow of an ex-Indian PM.

Long live INDIA

//மெயிலில் வந்தது//

said...

இன்று வரை இறந்து போன ஹெஸ்பொல்லாக்கள் ஆறு பேர் மட்டுமே
ஆனால் பொதுமக்கள் 300

மற்றும் 1000 திற்கும் அதிகம் பாதிக்க பட்டவர்கள்
நாளை அவர்கள் ஹெஸ்பொல்லாக்கள் ஆகலாம் அப்போது அவர்கள் கேக்க கூடும். நாங்கள் எங்கள் சொந்தங்களை சொத்துக்களை இழந்தபோது நீங்கள் எங்கு சென்றீர்கள் என்று ???

பாதிக்க பட்டவர்களுக்கு பழிதீர்க்க முழு உரிமை உண்டு இஸ்ரேலை போல...........

http://www.dailythanthi.com/article.asp?NewsID=272361&disdate=7/20/2006

said...

அபிராமி,

thats another Leftist propaganda website...I have seen personally this sort of post card pictures in reality in TelAviv suicide bombing.

What matters here is Israel is got the will to tackle its enemy who covertly support cross border terrorism in the name of a "cult" called islam.

Indians like me feel bad because our government has no guts what so ever to act. But, will compromise national security for the sake of "secularism" and muslim vote bank.

I say, we bring back POTA, raid the local terrorist supporters. bring them to justice.

Can it happen?
Or, as it happened in Hyderabad, when a local muslim terrirorist was arrested, the Mullah of the mosque instigated people in to riot and the police had to fire!!

said...

மின்னல், தப்பாக சிந்திக்கிறீர்கள். முதலில் சணடையை ஆரம்பித்தது ஹெஸ்பொல்லாதான். பிறகு பொதுமக்களின் பின் ஒளிந்துக் கொண்டு ஏய் இன்னா என பொட்டையாக சவுண்டு விடுவத்டும் அவர்கள்.

சண்டையில் அநாதையானவர் பழி வாங்க வேண்டும் என்றால் ஹெஸ்பொல்லாவைதான் பழிவாங்க வேண்டும் ஏனென்றால் அவர்கள்தான் ஆரம்பித்தவர்கள்

இதை வைத்து இஸ்ரேல் என்ற நாடே தேவையில்லாதது என வாதம் செய்ய வேண்டுமென்றால் தனிப் பதிவு ஆரம்பிக்கவும். என்னை விட இஸ்ரேலைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள் பதிவில் இருக்கிறார்கள்

said...

அபிராமம்,

இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவத்தில் சமநிலையில் இல்லை. இந்தியா பாகிஸ்தானை விட அதிக பலம் பொருந்தியது. அதனால்தான் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் இறங்குகிறது. இல்லையென்றால் நேரடியாக மோதியிருக்கும்.

கிழக்குபாகிஸ்தானை இழந்த வடு அவர்களுக்கு இன்னும் இருக்கிறது.

தயங்குவது ஓட்டுப் பிச்சைக்காரர்கள் தான்.

said...

என்ன சிவகுமார், அமைதியாகி விட்டீர்கள்.

விடுதலைப் புலிகளின் போரட்டமும் காஷ்மீர் மற்றும் இஸ்ரேலிய பிரச்னைகள் வெவ்வாறனவை.

விடுதலை புலிகள் சண்டையில் நியாயம் உள்ளது. ஆனால் அவர்கள் அணுகுமுறையில் நியாயம் இல்லை. அதுவும் இந்திய மண்ணில் செய்த கொலைகளுக்க்கு இந்திய சட்டப்படி தண்டனை அனுபவித்தே தீரவேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்

said...

ஷிவா,

இந்த சூழ்நிலையின் மற்றொரு பக்கம் பற்றி யோஸித்ததில் என் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்தன:

>>> இந்தியா பாகிஸ்தானை விட அதிக பலம் பொருந்தியது.<<<<

உண்மைதான். ஆனால் வேறு பல விஷயங்களையும் சிந்திக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

1. கார்கில் யுத்தம் முடிந்த பின் அதைக் காரணம் காட்டி பல வழிகளில் அரஸாங்கம் மக்களிடம் பணம் வஸூலித்தது. ஒரு பேட்டிலுக்கே இப்படி என்றால் வாருக்கு நாம் தயாரா (பொருளாதார அளவில்)? இஸ்ரயீல் போருக்கு எல்லா வகையிலும் தயாராக உள்ளது. போரினால் ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கு அது பல்வேறு கோணங்களிலும் "எப்போதும்" தயாராக உள்ளது. நாம் அதுபோல இருக்கிறோமா என்று தெரியவில்லை.

2. பாகிஸ்தானுக்காக, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிடமிருந்தும் (இந்தியா உட்பட) போர் புரிய மக்கள் இருக்கிறார்கள். எனவே பாகிஸ்தானின் ராணுவ பலத்தை மட்டுமே இந்த விஷயத்தில் கணக்கிலெடுக்கக்கூடாது. இந்தியாவிற்காக பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்ட ஒரு ரிடையர்ட் மேஜரின் பேட்டி ஞாபகம் வருகிறது. அவரது கருத்துப்படி நமது முந்தைய வெற்றிகள் ஒரு நூலிழை வித்தியாஸத்தில் கிடைத்தவை. பாகிஸ்தானின் ஒரே லக்ஷியம் இந்தியாவை கைப்பற்றுவதுதான். இரண்டு போர்களுக்குப் பின்னால் அது தன்னை எல்லா விதங்களிலும் தயார் செய்துகொண்டுள்ளது.

3. பாகிஸ்தானின் ஸேவை அமெரிக்க அண்ணணுக்கு தற்போது இன்றியமையாத தேவை. அதனால் லெபனான் -இஸ்ரயீல் ப்ரச்சினையில் நடந்துகொள்ளுவதுபோல அண்ணன் நம்மிடமும் நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும், நமது ஸோஷலிஸ அரஸியல்வாதிகளின் வால் இன்னும் ரஷ்யாவின் பிஸ்கோத்துக்களுக்கே ஆடுகிறது. அமெரிக்க அண்ணணின் பர்கருக்காக அவை ஆடுவதில்லை. எனவே, அண்ணன் அமெரிக்கா இந்தியாவைவிட, பாகிஸ்தானையே "தொடர்ந்து" நம்பும். அந்த அடிப்படையில்தான் நான் நமது ப்ரதமர் மன்மோகன் ஸிங்கின் தீவிரவாத எதிர்ப்புப் பேச்சை பார்க்கிறேன். அதில் அவர் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது உலக நாடுகளின் ஒத்துழைப்பை (அதாவது அமெரிக்காவின் ஒத்துழைப்பை).

4. ஒரு போரை நடத்துமளவுக்கு உறுதியான தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. (ஸோனியா ஆண்டி போர் ஆரம்பித்தவுடன் இத்தாலிய அரஸாங்கத்தின் போலீஸ்காரர்களை தன் பாதுகாப்புக்காக அமைத்துக்கொள்வார். அத்வானி இந்தியா வெல்லும் என்று கூறி, ஜின்னா போன்ற உத்தமரைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிடுவார். வாஜ்பாய் கவிதை படிப்பார். மூன்றாவது அணி அமைவதும் பாகிஸ்தான் இந்தியாவை பிடிப்பதும் ஒன்றுதான்).

இந்த சூழ்நிலையில் செய்யக்கூடிய ஒரே விஷயம், இந்தத் தீவிரவாதிகளை வேட்டையாடி போட்டுத் தள்ள வேண்டியதுதான். இதை இந்திய அரஸாங்கம் எப்போதும் செய்யப்போவதில்லை. மேலும், பிடிபட்ட தீவிரவாதிகள் அனைவரும் ஸாக்ஷிகளில்லை என்கிற சாக்கில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதற்குக் காரணம் வெடிகுண்டு மாதிரியான விஷயங்களில் உண்மை தெரிந்தாலும் ஸாட்ஷிகளை, அதுவும் சட்டத்திற்கு தேவைப்படும் ஸாட்ஷிகளை கொண்டு வருவது நடக்கவே நடக்காது. பிக்பாக்கெட் கேஸுக்கே போலீஸ் போலி ஸாக்ஷிகளைத்தான் நம்புகிறார்கள். உண்மையான ஸாக்ஷிகள் யாரும் முன்வருவதில்லை. வேறு வகையில் சொன்னால், இந்தியாவில் தீவிரவாதிகளுக்கு தண்டனை என்பது சட்ட ரீதியாக எப்போதும் ஏற்படாது. (இன்னும் கொஞ்ச நாளில் மதானியும் வெளியே வந்துவிடுவார் பாருங்கள்).

அதாவது சட்ட ரீதியாக இதை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. போருக்கு போகவும் நாம் தயங்குகிறோம். தேடிப் பிடித்து போட்டுத்தள்ள அரஸாங்கம் விரும்பாது. ஒரே ஸொல்யூஷன், அரஸாங்கம் விரும்பாத இந்த விஷயத்தை தன்னார்வ அமைப்புகள் எற்றுக்கொண்டு செயல்படுவதுதான். தீவிரவாதிகளுக்கு அன்பை போதிக்க வேண்டும்.

பாகிஸ்தானோடோ, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மீதோ போருக்குப் போவதெல்லாம் இருக்கட்டும். குறைந்த பக்ஷம் இந்தியாவிலுள்ள தீவிரவாதிகள் மீது இந்தியா போர் தொடுக்கட்டும். பார்க்கலாம்.

said...

//
இஸ்ரயீல் போருக்கு எல்லா வகையிலும் தயாராக உள்ளது. போரினால் ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கு அது பல்வேறு கோணங்களிலும் "எப்போதும்" தயாராக உள்ளது. நாம் அதுபோல இருக்கிறோமா என்று தெரியவில்லை.
//

இஸ்ரேல் போருக்கு என்றுமே தயாராக இருக்கவேண்டிய சூள் நிலை அதுவும் ஒரு முக்கிய காரணம்....சுற்றியும் எதிரிகள் என்றிருக்கும் போது...அது அப்படித்தான் இருக்கவேண்டும்....

இந்தியா பாகிஸ்தானுடன் போருக்குச் செல்லவேண்டாம், குறைந்த பட்சம் உள் நாட்டுத்தீவிரவாதிகளை ஒடுகவாவது செய்யலாம்...ஆனால் இந்தியா பாகிஸ்தானை துவம்சம் செய்தாலும் எந்த தவறும் இல்லை.

The idea of pakistan stemmed from the hatered towards Hindus. And the sole reason D etre for the existence of the State of pakistan is that hatered.

said...

//பாகிஸ்தானின் ஸேவை அமெரிக்க அண்ணணுக்கு தற்போது இன்றியமையாத தேவை//

ம்யூஸ், அந்த தேவையை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள தீவிரவாதிகளை வளர்ப்பது அவர்களின் வழக்கம்.

இது அமெரிக்காவிற்கும் தெரிந்துதான் இருக்கிறது

said...

ஷிவா,

>>> தேவையை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள தீவிரவாதிகளை வளர்ப்பது அவர்களின் வழக்கம்.<<<

அவர்களின் - புரியவில்லை.

இஸ்ரயீலைச் சொல்லுகிறீர்களா, அல்லது அமெரிக்காவையா, அல்லது இருவரையுமா?

said...

ம்யூஸ், நான் சொன்னது பாகிஸ்தானை.

பாகிஸ்தானின் சேவை அமெரிக்காவிற்க்கு தேவை.

இந்தத் தேவையைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வளர்க்கிறது