Monday, July 10, 2006

நீங்கள் தேவதூதரா? - இறுதி பதில்


முகமது இவர்தான் கடவுளின் கடைசி தூதர்.

இவருக்கு 9 மனைவியர்.

தூதருக்கு இது சரி.

அந்த காலத்தில் ஒருவரின் மதிப்பு அவர் மணந்த/புணர்ந்த பெண்களின் எண்ணிக்கையில் இருந்தது.

இவரைத்தான் கடவுள் அவரின் கடைசி தூதுவராக தேர்ந்தெடுத்தார் .

இந்த மனிதர் பெண்களை ஒரு கால்நடைகளைப் போல் நடத்தினார். பெண்களை மனித இனமாகவே மதிக்கவில்லை இவர். ஆனால் இது ஒன்றும் இல்லை அவருடைய வாழ்க்கையைப் பார். எத்தனை கொலைகள் எத்தனை போர்கள். கடவுளின் வார்த்தைகளைப் பரப்ப மனிதர்களை கொன்றுக் குவித்தார். அமைதி மார்க்கத்தைப் பரப்ப கொலைகள்.


இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் என்று பொருள்.

முகமதுவின் வாளில் அமைதி என் மார்க்கம் (Peace is my Message) என எழுதியிருக்கும்.

ஆனால் அங்கே ஒரு நிபந்தனை நீ முகமதிஸத்திற்கு, இஸ்லாத்திற்கு மாறினால் அமைதி உனக்கு. இல்லையென்றால் அவர் உன்னை கொன்று மேலும் நீ பாவங்கள் புரியாமல் இருக்க உனக்கு அவர் உதவுவார்.

உன் நன்மைக்காக உன்னைக் கொன்று அன்பை செலுத்தும் அன்பின் உருவம் அவர்.

அவர் அருகிலா எனனை அமர சொல்கிறாய்?


பரசுராமர் ஒரு அன்ஸாவதாரம். அதவாது அவர் முழுமையான அவதாரமல்ல.

இரண்டாவது முக்கியமான அவதாரம் இராமர். இவர் இந்தியா முழுவதும் வணங்கபடும் ஒரு முழு முதல் கடவுள்.

(இராமயணமத்தை டிவீயில் போட்டு ராவும் நேரத்தில் நீ வடபழனியில் கோழி வாங்கினதை மறந்து விட்டாயா சிவா?

மறக்கவில்லை ஓஷோ, அப்போது தான் கோழிக் கடையில் கூட்டம் கம்மியாக் இருக்கும்.)


ஏன் அவ்வாறு அவர் வணங்கபட்டார்? தந்தையின் முட்டாள் தனமானக் கட்டளையை சிரமேற்று அடிபணிந்ததால்.

கலாசாரத்திற்கு, தந்தைக்கு, முன்னோருக்கு, இறந்த காலத்திற்கு இறந்தவர்க்கு இவர்களுக்கு அடிபணிந்ததால் இந்துக்கள் இவரை தெய்வமாக்கினர்.

இவரின் மனைவி சீதா இவரைப் பின் தொடர்ந்தார். இந்தியாவில் பெண் என்பவள் தனக்கென்று ஒரு மனமில்லாமல் கணவனை நிழலாக பின் தொடரவேண்டும். அப்போது தான் அவள் நல்லவள் இல்லையேல் விபசாரி.

அவள் நிழலாக ராமரை பின் தொடர்ந்தாள் ஆனால் ராவணனால் கவரப்பட்டாள். ராமர் 3 வருடங்கள் தேடி ஆடகளை சேர்த்து போரிட்டு சீதையை மீட்டார். மீட்டவுடன் உடனையாக சேர்த்துக் கொண்டாரா என்றால் அதுதான் இல்லை.

அக்னி பிரவேசம் அவளின் கறபை சோதிக்க. இவரின் கற்பை யார் சோதிப்பது. ஆண் பெண்ணின் கற்பைப் பற்றி கேள்வி கெட்காலும் ஆனால் பெண் பேசக்கூடாது.

அக்னி ப்ரவேசம் என்பது என்ன ஒரு மடத்தனமானது.

நீ 2 +2 = 4 என்று கூறினால் நான் நம்பமாட்டேன். அந்த விளக்கில் கையை வை. அந்த் தீ உன் விரலை சுடாவிட்டால் 2+2=4 இல்லையேல் 6. இந்த அளவிற்கு மடத்தனமானது அந்த அக்னிப் பரீட்சை.

சரி ஊருக்கு வந்தார்கள் மக்களுக்கு சந்தேகம். உடனே ராமர் சீதையை காட்டுக்குத் துரத்தினார். மக்களின் நம்பிக்கையின்மை அதிகாரத்திற்கு கேடு. ஆகையால் தான் சீதையை காட்டுக்குத் துரத்தினார் ராமர். இவர் ஒரு அரசியல் வாதி ஒரு மூன்றாந்தர அரசியல் வாதி. இவரைத் தான் இந்துக்கள் தெய்வமாக வண்ங்குகின்றனர்.

இவரும் பூரணவதாரம் இல்லை.

இந்துகளின் பரிபூரண அவதராம் கிருஷ்ணரை போல் பலே கில்லாடி யாருமில்லை.

முகமதுவிற்கு 9 மனைவிகள் தான் அதைக் கேட்டு ஆச்சரியமடைந்தாய் ஆனால் கிருஷ்ணருக்கோ 16000 மனைவிகள்.

நான் இதைக் கதை என்று நினக்கவில்லை. உண்மையென்றே கருதுகிறேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் ஹைதரபாத் நிஜாமிற்கு 500 மனைவிகள் இருந்தனர். 5000 வருடங்களுக்கு முன் சற்றே அதிகமாக் அதாவது நிஜாமை விட 32 மடங்கு அதிகமான மனைவியர் கொண்டிருந்தார் கிருஷ்ணர். இது சாத்தியம். அனைவரையும் சட்டபடி மணந்தாரா என்றால் இல்லை. கள்ளத்தன்மாக....

இவர்தான் பூரண அவதாரமாக இந்துக்களால் கொண்டாடப் படுகிறார்.

இவர்களுடன் இருக்க நான் விரும்பவில்லை.

நான் உன்னை போல் ஒரு மனிதனாக இருப்பதையே விரும்புகிறேன்.

என்னைச் சங்கடத்தில் மாட்டிவிடாதே.

நான் தேவதூதராக இருக்கவேண்டுமென்றால் யேசுவைப் போல் தண்ணீரில் நடக்கவேண்டும். கலீலீ ஏரியில் பாறைகள் எங்கிருந்தன என்பது யேசுவிற்கு தெரிந்திருக்க வேண்டும். தண்ணீரில் எப்படி நடக்க முடியும்

நான் அற்புதங்கள் நடத்திக் காட்டவேண்டும். அற்புதங்கள் இல்லாமல் நான் எப்படி தேவதூதன் ஆக முடியும்?.

என்னுடைய நணபர் ஒருவர் கல்கத்தாவில் இருந்தார். இவர் ஒரு சூபி. ஒரு நாள் இவர் ஹௌரா ஸ்டேசனில் ஒரு அற்புதததை நடத்திக் காட்டினார். இவரிடம் டிக்கட் கேட்ட டிடிஈ இடம் இவர் டிக்கட் காட்டமுடியாது என அடம்பிடித்தார்.

டிக்கட் பரிசோதகர் இறங்க சொன்னார்.

என்னை கழுத்தைப் பிடித்து தள்ளினால்தான் இறங்குவேன் என்றார்.

டிடிஈ யும் அவ்வாறே செய்தார்.

இந்த சூபி ப்ளாட்பாரத்தில் இறங்கி நான் இல்லாமல் வண்டி எவ்வாறு நகரமுடியும் என சவாலிட்டார். இந்த டிடிஈ மன்னிப்பு கேட்டால் ஒழிய வண்டி நக்ராது என்று சூழுரைத்தார்.

இஞ்ஜீனியர்கள் எவ்வள்வு முயன்றும் வண்டி நகரவில்லை.

கூட்டம் கூடியது ரகளை நடந்தது.

கடைசியில் டிடிஈ மன்னிப்புக் கேட்டதும் வண்டி நகர்ந்தது.

என்ன அற்புதம் . அவர் வங்காளம் முழுவதும் பிரபலமானர், அவர் செய்த அற்புதம் என்னவென்றால் அந்த டிடிஈ, டிரைவர் மற்றும் எஞ்ஜினியர்க்கு லஞ்சம் அளித்ததே.

என்னால் அற்புதங்களை நடத்த முடியாது. அற்புதங்கள் என்றைக்குமே நடந்ததில்லை.

இயற்கை உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றும் கொடுத்ததில்லை.

உனக்கும் எனக்கும் யேசுவிற்கும் மோசஸிற்கும் கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும் இயற்கையின் விதிகள் ஒன்றே.

அற்புதங்கள் செய்பவர் இயற்கையை மட்டும் ஏமாற்றவில்லை உன்னையும் தான்.

இயற்கைதான் எல்லாமே அதற்கு மேல் எதுவும் இல்லை.

இயற்கையுடன் இசைந்து வாழ்.

இயற்கையுடன் இரண்டற கல

காலையில், மாலையில், இரவில், இன்பத்தில், துன்பத்தில், வாழ்வில், சாவில் இயற்கையுடன் இசைந்திரு முழுவதுமாக..

சரியா சிவா

சரிதான் ஓஷோ

முற்றும்.........

இதன் ஆங்கில மூலம் இங்கே

18 comments:

said...

//இயற்கைதான் எல்லாமே அதற்கு மேல் எதுவும் இல்லை.

இயற்கையுடன் இசைந்து வாழ்.

இயற்கையுடன் இரண்டற கல

காலையில், மாலையில், இரவில், இன்பத்தில், துன்பத்தில், வாழ்வில், சாவில் இயற்கையுடன் இசைந்திரு முழுவதுமாக..//

ஆகா அருமையான வார்த்தைகள். இதனுடன் முழுமையாக நான் முழுமையாக ஒத்துப் போகிறேன்.

உலகில் எல்லாமே காலத்தின் போக்கில் நடந்து கொண்டிருக்கிறது. எங்கும் அதிசயங்கள் இல்லை. பல அதிசயமாகக் கருதப்படும் விசயங்களில் அறிவியியல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

கடவுளை மட்டுமே நம்புபவர்கள் அணு எப்படி வந்தது. புரோட்டான், எலக்ரான், நியூட்ரான் எப்படி வந்தது. அது கடவுளால் தான் என்பர். அதுவல்ல உண்மை. அதனைக் கண்டுபிடிக்க மனிதனுக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்பதே உண்மை. எல்லாம் காலத்தின் போக்கில் தெளிவான நீரோடை போல நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் எந்தவித முன்பதிவுகளே, முற்பயன்களோ இல்லை. இது எனக்கு நன்றாகப் புரிகிறது.

ஆத்திகம் பேசும் அன்பருக்கெல்லாம் சிவமே அன்பாகும். நாத்திகம் பேசும் நல்லவர்கெல்லாம் அன்பே சிவமாகும்.

said...

//இயற்கை உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றும் கொடுத்ததில்லை.

உனக்கும் எனக்கும் யேசுவிற்கும் மோசஸிற்கும் கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும் இயற்கையின் விதிகள் ஒன்றே.

அற்புதங்கள் செய்பவர் இயற்கையை மட்டும் ஏமாற்றவில்லை உன்னையும் தான்.//

Very nice one siva ..Thanks for sharing

said...

//ஆத்திகம் பேசும் அன்பருக்கெல்லாம் சிவமே அன்பாகும். நாத்திகம் பேசும் நல்லவர்கெல்லாம் அன்பே சிவமாகும்.//
மகேஸ் ... இந்த பொன் எழுத்துக்களுக்காக உங்களை ஓராயிரம் முறை பாராட்ட வேண்டும்

said...

கரிக்கோலு சவம் அண்ணே... நீயி ரஜனீசு ஆளா. பிரியிதுலே ஒன்னே ஏன் கல்ஃபுல அடிச்சு வெரட்டுனாங்கன்னு. ஃப்ரீ செக்ஸ் வானும்னா மும்பாயிலே ரெட்லைட் ஏரியாக்குல போயிருக்கனும். (அட அதான் மூளை இல்லேன்னு முன்னாடியே சொல்லிட்டியே. மறந்துடுத்து)

ம்.... ரஜனீஸ்-ஷீலா சல்லாபம் பத்தி எதுனாச்சும் எடுத்து உடேன். 1980 ல்லேர்ந்து 2000க்குள்ள ஒலகம் அழிஞ்சுடும்னு சொல்லிட்ய்ஹ்தானய்யா எல்லாரையும் சாப்பிட்டான் ரஜனீசானந்தா (பிரேமானந்தாட குரு;-).

போங்கப்பூ போயி உருப்படியா எதுனாச்சும் எழுதுங்கப்பூ. (:-)

said...

புலிபாண்டி சார், பாம்பே ரெட்லைட் ஏரியாவிலே செக்ஸ்கு சார்ஜ் பண்ணுவாங்க சார் ப்ரீ இல்லை. உங்களை மாதிரி அறிவுசீவிகளுக்கு ப்ரீயா கிடைக்கலாம் ட்ரை பண்ணுங்க

காந்தி படத்தை கஸ்தூரிபாவின் காம களியாட்டங்கள் என்ற தலைப்பில் வெளியிடும் தியேட்டர்களில் பார்த்த உமக்காக ரஜ்னீஷ் - ஷீலா காம களியாட்டங்கள் என்று யாரவது எழுதினால் படித்து இன்புறவும்.

இன்னொரு தகவல். யாரும் என்னை அரேபியாவிலிருந்து அடித்து துரத்தவில்லை.

நான் நினைத்தால் நாளை கூட அரேபியாவில் வேலைக்கு போக முடியும்

said...

Prophetism என்பது ஏமாற்றுவேலை அதற்கு உலகில் உள்ள அனைத்து மதங்களும் விதிவிலக்கில்லாமல் பாதிக்கப் பட்டிருக்கின்றது...கடவுளே இல்லை என்ற கம்யூனிசத்தில் கூட பிரச்சனை அது தான்...

Prophetism is a psychological phenomenon...it should be studied and understood so that future generations may not face this menace.

பு(எ)லிப்பாண்டி,

//
போங்கப்பூ போயி உருப்படியா எதுனாச்சும் எழுதுங்கப்பூ.
//

எழுவுறதுக்கு நீங்க சொல்லி இவரு தெரிஞ்சிக்கிற நெலமையில இல்லீங்க...உங்க பதிவுல தான் அந்த "உருப்படி" யெ எழுவுறது...

said...

சிவா,
ராமரைப் பற்றிய தங்களது கருத்துக்களை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

ராமர் தனியாகத்தான் வனவாசம் செல்ல நினைத்தார். ஆனால் அவரை விட்டு பிரிய மனமில்லாமல் சீதை அவருடம் சென்றார். அது கணவன் மனைவிக்குள் இருக்கும் பாசம்.
லட்சுமணன் தனியாகத்தானே சென்றார். அதனால் அவர் மனைவியைப் பற்றி தவறாக நினைத்தோமா? இல்லை. ராமனைவிட லட்சுமணன் உயர்ந்தவனாகிறான். அதனால் இங்கே பெண்ணுடிமை என்ற பேச்சுக்கே இடமில்லை.
சீதை தீக்குளிப்பைப் பற்றி செல்வன் ($elvan) அவர்களின், "கனலை எரித்த கற்பின் கனலி"யை படித்து தெரிந்து கொள்ளவும்.
http://holyox.blogspot.com/2006/05/88.html

அடுத்ததாக, சீதையை மீட்டு வந்து ராமனால் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. கணவனுக்கு துரோகம் செய்த ஒருத்தி சீதையை உதாரணம் காட்டி கணவனிடம் தன்னை ஏற்றுக் கொள்ள சொன்னாள்.
தனி ஒரு மனிதனின் செயல்களுக்கும் அரசாள்பவன் செயல்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்களுக்கு இராஜியத்தில் வாழும் குடிகள் தான் முக்கியம்.
(உதாரணத்திற்கு, சிவகாமியின் சபதத்தில் மகேந்திரவர்ம பல்லவன், மாமல்லன் சிவகாமியை மறந்து பாண்டியனின் மகளை மணக்கவில்லை என்றால் தானே சிவகாமியை மணந்து கொள்ள போவதாக சொல்வது)
அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் மக்களூக்காக பல தியாகங்களை செய்ய
வேண்டும்.
அதே நிலைதான் ராமனுக்கும். அவர் மனைவியை பிரிந்து மகிழ்ச்சியாக வாழவில்லை. சீதாப்பிராட்டியாவது தன் பிள்ளைகளுடன் வாழ்ந்தாள். ஆனால் ராமன் சன்யாசியாகத்தான் வாழ்ந்தான்.
மன்னாக அவன் தன் கடமையை செய்தான். நல்ல கணவனாக இருந்தானா என்பதைப் பற்றி நாம் பேச முடியாது ஏனென்றால் அது கணவன் மனைவிக்குள் இருப்பது.

//இயற்கைதான் எல்லாமே அதற்கு மேல் எதுவும் இல்லை.

இயற்கையுடன் இசைந்து வாழ்.

இயற்கையுடன் இரண்டற கல

காலையில், மாலையில், இரவில், இன்பத்தில், துன்பத்தில், வாழ்வில், சாவில் இயற்கையுடன் இசைந்திரு முழுவதுமாக..//
இந்த கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன்.

said...

பாலா, தங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி. இது ஒஷோ அவர்களின் பேச்சு.

இங்கே அவர் சொல்லவந்தது என்னவென்றால் தூதுவர், இறைவனின் மைந்தன், அவதாரம் அந்த மாதிரி கான்சப்டுகள் தப்பு.

எல்லாமே உன்னை அடிமையாக்கும் உன் எண்ணத்தை ஒரு சிந்தனைக்குள்ளோ அல்லது ஒரு புத்தகத்துள்ளோ சுருக்கிவிடும் என்பதெ அவர் வாதம்.

இங்கே அவர் கிருஷ்ணனையும் திட்டிவிட்டு இன்னொரு முறை கிருஷ்ணா என்ற மனிதனும் அவனின் தத்துவங்களும் என அருமையானப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

அவர் அளித்த கீதையின் விளக்கங்கள் அட்டகாசமானவை.

நீங்கள் ஒரு தேவதூதரா எனக் கேட்டதும் பொங்கி வந்த கோபத்தால் வந்த பேச்சு தான் இது.

நான் கொடுத்த சுட்டியைப் பார்க்கவும் அருமையான தத்துவங்கள். அந்த சுட்டி இங்கே http://www.friendsofosho.com/

said...

சிவா,
இது உங்களோட கருத்துன்னு நினைத்தேன்...அதனால தான் பின்னூட்டம் கொஞ்சம் பெரிசாயிடுச்சி...
நீங்க குடுத்த லிங்க்கை படித்துப் பார்க்கிறேன்.

நன்றி
வெட்டி

said...

அனானிகள் அனுமதிக்கப்படாமலிருப்பதாலும், இப்பதிவிற்கு பின்னூட்டமிடும் முக்கிய நோக்கத்தாலும் அடியேனின் வலைப்பூ பிரவேசம். என் மனதில் பட்டதை வலைப்பூவாக மலரவைக்கிறேன். மலர்களின் அழகையும் மணத்தையும் ரசித்து இன்புறுவீர்கள் என ஒரு சிற்றாசை. பார்ப்போம்.

மெகாலோமேனியா என்றால் என்ன என்பதனை ஓஷோ எனும் மெகாலோமேனியா நன்றாகவே விளக்கியுள்ளார். நான் ஓஷோவின் படைப்புகளை அதிகம் படித்தில்லை. ஆனால் ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்னும் முதுமொழியில் நம்பிக்கையுடையவன். ஒரு நொடி... நான் ஒன்றும் பத்தாம் பசலியல்ல. நானொரு சினிமா குடுமி. ஒரு விதத்தில் நானும் மெகாலோமேனியா!!

சினிமா குடுமியை இப்பதிவாளர் அவிழ்த்துவிட்டார். ஆகவே, அது மீண்டும் முடியப்படும்வரை தொல்லைகள் தாங்கிக்கொள்ளப்படவேண்டும் என்பது விதி.

பணிவு, கனிவு, துணிவுடன்,
சினிமா குடுமி

said...

யாருப்பா அது சினிமா குடுமி புது ரவுசா. அண்ணே நம்ம அறிமுகத்தை பாருங்க யாருவேணா வரலாம் ஜல்லி அடிக்கலாம்.

குடுமியை அவிழுங்க முடிங்க யாரு வேண்டாமின்னா.

ஆனா உங்க குடுமியை மற்ற யார் கையிலும் கொடுத்துடாங்க.

ஆமா குடுமி எந்த ஊரு...பார்த்துப்பூ தமிழ்மணத்தில் குடுமிகளை வெட்டுவதற்கு கத்திரியுடன் நிறைய பேர் அலைகிறார்கள்

said...

Siva
Don't worry about puliPanndi. Indian media spoiled the name of rajneesh.
Nice work.
with best
CT

said...

//என்னால் அற்புதங்களை நடத்த முடியாது. அற்புதங்கள் என்றைக்குமே நடந்ததில்லை.

இயற்கை உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றும் கொடுத்ததில்லை.

உனக்கும் எனக்கும் யேசுவிற்கும் மோசஸிற்கும் கிருஷ்ணனுக்கும் புத்தருக்கும் இயற்கையின் விதிகள் ஒன்றே.//

A totally wrong concept. May be partially true when mind just wants to be an observer. But when the mind wants something to happen, it happens and when it wants to be a ruler over the nature, it can. Nature becomes a servent to it- or atleast affected by it. Yes; There is possible interaction between mind and matter and mind does matter. Possibly, western world, will come up with some scientific explanation for this. Then only, we will believe the concepts on "mind and matter" existed in India for 2000 years are surprisingly correct.

said...

நல்ல பதிவு. நன்றி சிவா.

உங்கள் (அல்லது) ரஜனிஷ் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை போல் தோன்றுகிற்து.

யோகிகளும் ஞானிகளும் அற்புதங்கள் பல நிகழ்த்தும் வல்லமை பெற்றவர்கள் என்றெ எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால் ஞாநியாகபட்டவர்கள் காலத்தையும், வெளியையும் கடந்து விடாதாகச்சொல்லப்படுவதால் அவர்களால் நம்மால் பார்க்க, உணரப்படும் பெளதிக விதிகளை தாண்டிச்செல்ல முடியும் என்றே கருதுகிறேன் அல்லது அவர்களுக்கு அந்த சக்தி இல்லவே இல்லை என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களை நீங்களோ அல்லது ரஜனீஷோ அளிக்கவில்லை. அதை உங்களது கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும். நான் சொல்லியிருப்படும் எனது கருத்து மட்டுமே.

ராமன், கிருஷ்ண்ன், ஏசு, முகமது இவர்கள் எல்லாம் அந்த வகையில் உள்ளவர்களா என்பது வேறு விவாதம்.

ஆனால் அற்புதங்கள் நிகழ்த்தினால் மட்டுமே ஞாநி என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. வளர்ந்த மானுடம் தன்னுள் ஏற்றிக்கொண்ட கார்பேஜ்-களில் இதுவும் ஒன்று.

said...

//நீ முகமதிஸத்திற்கு, இஸ்லாத்திற்கு மாறினால் அமைதி உனக்கு. இல்லையென்றால் அவர் உன்னை கொன்று மேலும் நீ பாவங்கள் புரியாமல் இருக்க உனக்கு அவர் உதவுவார்.

உன் நன்மைக்காக உன்னைக் கொன்று அன்பை செலுத்தும் அன்பின் உருவம் அவர்.
//

அட, ரஜனீஷ் சொன்னதை படிக்கலாம் போலிருக்கிறதே...

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

said...

All those who participate here,
Just go and watch (again) the movie Matrix and Matrix Reloaded. Try to match what's being shown there. You'll find the handy work of Cinema people. Read something somewhere and picture that into a movie.

Whay am I writing this here? I don't know. Probably I shall try to come out if I get to know.

Trinity is still my name!!

In the name of Holi Son, Father and the Spirit,

So be it,
Cinema Kudumi

said...

திருமூலரே,

தாங்கள் தங்கள் கருத்துகளை பதிக்கலாமே.

நானும் ஓஷோவை கண்மூடி நம்புவதில்லை.

எல்லாமே விவாததிற்கு உரியதுதானே.

ரஜினிகாந்த் சிபாரிசு செய்த லிவிங் வித் இமாலயன் மாஸ்டர் என்ற புத்தகத்தை வாசித்து வியந்திருக்கிறேன்.

குண்டலினி யோகத்தைப் பற்றி படித்து இவ்வாறெல்லாம் இருக்க முடியுமா எனவும் வியந்திருக்கிறேன்.

தங்களின் எழுத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கும்

சிவா

said...

புதுமை விரும்பி,

உங்களிடமிருந்தும் அற்புதங்களைப் பற்றி நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.