Wednesday, July 05, 2006

பரிசு பொருட்கள்

இந்தியாவிற்கு ஒவ்வொரு முறை விடுமுறைக்கு போகும் போதும் நண்பர்களுக்கும் உறவினருக்கும் பரிசு பொருட்கள் வாங்குவதில் மண்டை காயும். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் இந்த கவலையெல்லாம் இல்லை. ஆனால் இப்போது இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைப்பதால் எதை வாங்குவது என்று மண்டையை குடைந்து வாங்க வேண்ட்யுள்ளது. எனக்கு தெரிந்து நான் கிழே பட்டியல் இட்டுள்ள பொருட்கள் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். வலைப் பதிவு நண்பர்களே உங்களுக்கு தெரிந்தவைகளை பட்டியல் இடுங்களேன்.


1. பாட்டரி இல்லாத ப்யூஸ் ஆகாத டார்ச் லைட் .

இந்த டார்ச் லைட்டை 30 விநாடிகள் குலுக்கினால் சுமார் 5 நிமிடங்கள் எரியும். இதன் பல்ப் ப்யூஸ் ஆகாது. அடிக்கடி பவர் கட் ஆகும் ஊரில் உள்ளவருக்கு இது ஒரு நல்ல பரிசு





2. எல்லாவற்றையும் திறக்கும் ஆயுதம்

வீட்டில் பாட்டில் மூடி திற்க்கவில்லையா, ஷவர் ஹெட் கழட்டமுடியவில்லையா, சில குழாய்கள் கழட்டமுடியாமல் அடம் பிடிக்கின்றனவா. இதோ ஸ்ட்ராப் ரெஞ்ச். இது பிளம்பர் மற்றும் மெக்கானிக் நண்பர்கள் உறவினர்களுக்கு ஒரு உபயோகமான பொருள்



3. சூரிய சக்தி அலங்கார விளக்குகள்.

இந்த விளக்குகள் சூரிய சக்தியால் இயங்குகின்றன. பகல்முழுவதும் சூரிய வெளிச்சதில் மின்சாரம் உற்பத்தி செய்து இதில் உள்ள பாட்டரியை சார்ஜ் செய்யும். இரவானதும் தானக விளக்குகளை ஏற்றி அலங்காரம் செய்யும். தோட்டம், மொட்டை மாடி, வெராண்டா ஆகிய் இடங்களில் இதைப் பொருத்தலாம். வயரிங் தேவையில்லை


4. காரில் AC பவர்

இந்த converter காரின் 12V DC ஐ 120/230 AC ஆக மாற்றிவிடும். இதை வைத்து
லாப் டாப் மற்றும் DVD player களை இயக்கலாம். குழந்தைகள் வீடியோ கேம் ஆடலாம்

Photobucket - Video and Image Hosting

17 comments:

said...

அண்ணே

நல்ல ஐடியா குடுத்தீங்க.இல்லாட்டி இந்த வருஷம் என்ன வாங்கிட்டு
போவதென்று தெரியாமல் இருந்தேன்

said...

பெரிசண்ணே, உங்க ஐடியாவையும்/லிஸ்ட்டையும் சொல்லுங்க

said...

பெருவிலிருந்து ஒரு பத்து பதினைந்து டப்பாங்குத்து பாடல்கள்
DVD கொண்டு போய் , அதக் காப்பி எடுத்து நம்ம பையங்களுக்கு
குடுக்கலாமான்னு பார்க்கிறேன்.
http://www.perucd.com/product_info.php?products_id=483

said...

சிவா,
3வது ஐட்டம்தான் நானும் வாங்கினேன். ஆனால் தோட்டத்துலே வைக்கமுடியாதுங்க.
ஆளுங்க களவாடிக்கிட்டு போயிடறாங்க. மொட்டைமாடியிலே வைக்கலாம்.

ஃப்ளோட்டிங் பூக்கள் வாங்கித்தரலாம். இப்பெல்லாம் வீட்டுவீட்டுக்கு வாசல் ஹாலில் உருளியிலே தண்ணிர் வச்சிருக்கு. அதுலே மிதக்க விடலாம்.

said...

சிவா , ரொம்ப நன்றி. என்ன கேட்பது என்று தவிப்பவர்களுக்கும் உங்க பதிவு

மிக மிக உதவி.:-))
சாப்பாடு சமாசாரம். ரஸ்க்.,டயட் சாக்கலேட், டிகாப்ஃனேடட் காப்பி,
இன்னும் நிறைய இருக்கே!!

said...

சிவா, இந்த டார்ச் ஏற்கனவே சென்னைக்கு வந்திருச்சு. ஆனா உங்க படத்தில இருக்க மாதிரி இல்ல வேற ஷேப்.

சூரிய சக்தி விளக்கு என்ன விலை?

said...

பயனுள்ள பதிவு. தேசிபண்டில் இணைத்துள்ளேன். நன்றி.

http://www.desipundit.com/2006/07/06/gifts/

said...

பெருசு சூப்பர் CDக்கள். நானும் ஒரு செட் டவுன் லோட் செய்வேன். செக்கிரா என்ற பாடல் இங்கெ டாப் 10 ல் போய்கொண்ட்ருக்கிறது

said...

துளசி மேடம், ப்ளோட்டிங்க் பூக்கள் நல்ல ஐடியா

said...

மனு, சாப்பாடு சமாச்சாரம் இந்தியாவில் எல்லாம் கிடைக்கிறது. சென்னையில் நீல்கிரீஸ், புட்லேண்டில் ரெட்புல் முதல் டிகாபினேடட் வரை எல்லாம் கிடைக்கிறது.

said...

மனசு, எல்லாமே சைனா பொருட்கள் இந்தியாவில் வந்து விடும் விலையும் கம்மியாக இருக்கும்.

சூரியவிளக்குகள் 10 விளக்குகள் கொண்ட பேக் $30 முதல் $70 வரை (கனேடிய $ மதிப்பு சுமார் 40 ருபாய்கள்). அமெரிக்காவில் இன்னும் விலை கம்மியாக இருக்கலாம்

said...

டுபுக்கு வாங்க வாங்க, நீங்க நம்ம கொத்தனாரின் ஜுனியர். தேசிபண்டிட் இல் சேர்த்தற்கு நன்றி

said...

அண்ணன், பொருள் எல்லாம் நல்லா தான் இருக்கு.
நம்ம ஊருக்கு போகும் போது இந்த பிரச்சனை எல்லாம் கிடையாது. சாக்லேட், அப்புறம்... நம்ம பசங்க தான் என்ன கேட்பாங்கனு உங்களுக்கே தெரியுமுல.......அதே தான்.

said...

சிவா, சின்னவங்களுக்கு சாக்லேட்டும் நம்மளமாதிரி ஆட்களுக்கு நீங்க சொன்னதும் default. அதில்லாமல் எக்ஸ்ட்ராவாகதான் இந்த லிஸ்ட்

said...

என்னப்பா சிவாக்கள்ஸ்,

சின்னப்புள்ளைங்க, நம்ம மாதிரி ஆட்கள்...???????

அப்ப பொம்பளைங்க? அவுங்களுக்கு ஒண்ணும் வேணாமா?

ஆறு பெர்ஃப்யூம் பாட்டில்கள் ( ச்சின்னச்சின்னது) அடங்கிய செட் கிடைக்குதுல்லே.
அதுலே ரெண்டு வாங்கிக்கிட்டா அதையே பிரிச்சு ஆளுக்கு ஒவ்வொண்ணாக் குடுக்கலாமுல்லே.
சின்னப் பொண்கள் 10 -14 வயசுக்கும் இது ரொம்பப் பிடிக்கும்.

சூரியசக்தி விளக்கு 8 இருக்கற செட் இங்கே 20 டாலர்.(1 NZ $ + 26/27 Rs) இங்கே.

அப்புறம் sewing கடையிலே needle threader ( சிலப்ப சூப்பர் மார்கெட்லேயும்
கிடைக்கும்) மூணு இருக்கும் ஒரு பாக். இது வயசான முதியோருக்கு ரொம்ப வசதி.
நம்ம பாட்டிக்கு இது ரொம்பப் பிடிச்சது. புள்ளைங்களைத் தொந்திரவு செய்யாம தானே ஊசியில் நூல்
கோர்த்துக்கலாம்.

said...

என்னங்காணும் வீட்டுல அடியா? நம்ம ஐட்டம் எதுவுமே காணும்?

said...

இ.கொ.

நம்ம ஐட்டம் வந்து default அது இல்லாமலா?