
IT என்ற வார்த்தைக்கு என்றைக்குமே ஒரு சக்தியுண்டு. இன்று Information Technolgy என அறியபடும் இந்த சொல்சுருக்கம் 80களில் Instrument Technology என அறியப் பட்டது.
கருவியியல் என்னுடைய தொழில். கருவியியல் அதாவது Instrumentation என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே. நம் வீட்டிலோ அல்லது அடுத்தவீட்டிலோ அல்லது சொந்த காரர்களில் ஒருவரோ இந்த படிப்பை படித்துக் கொண்டிருப்பார்.
இந்த படிப்பை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்தியது அடியேன் படித்த அண்ணாப் பல்கலைகழகத்தை சேர்ந்த எம் ஐ டி என அழைக்கப்படும் Madras Institute of Technology என்ற கல்லூரிதான்.
இந்த கல்லூரியை நிறுவியவர் திரு இராஜம் ஐயர் அவர்கள். சுமார் 50 வ்ருடங்களுக்கு முன் மிகுந்த தொலைநோக்கில் அந்தக் காலத்தில் முற்றிலும் வித்தியாசமான பொறியியல் துறைகளான Aeronautics, Automobile, Electonics and Instrumentation ஆகியவைகளை தொடங்கினார். அண்ணா பல்கலைகழகத்தில் இணைந்தவுடன் இங்கே Production Technology மற்றும் Rubber Technology பாட பிரிவுகள் ஆரம்பிக்க பட்டு விட்டன.
முதன் முதலில் இங்கே B.Sc. படித்தவர்களுக்கு மட்டும் மூன்று வருட பொறியியல் படிப்பு இருந்தது. இப்போது +2 முடித்துவிட்டு 4 வ்ருட படிப்பாக மாறிவிட்டது
இங்கே படித்த பிரபலமானவர்களில் முதன்மையானவர்கள் மாண்புமிகு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும் பிரபல எழுத்தாளர் திரு சுஜாதா என்ற ரங்கராஜன் அவர்களும்.


சரி கருவிகள் என்றால் என்ன அவைகள் எங்கே புழங்குகின்றன என்பதை பார்ப்போமோ?
கருவிகள் நம் வாழ்வின் தரத்தை உய்ர்த்துவதில் ஒரு இன்றியாமையாத பங்கு வகிக்கின்றன. வீட்டில், வாகனத்தில், ஆஸ்பத்திரியில், அலுவலக்த்தில், தொழிற்சாலைகளில் ஏன் கோவில்களில் கூட உபயோக்கிக்க படுகின்றன.
தொழிற்சாலைகள் என்றால் எந்த மாதிரி தொழிற்சாலைகள்? அனைத்து தொழிற்சாலைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளன கருவிகள். உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இந்த கருவிகள்தான் தொழிற்சாலைகளின் நரம்பியல் மண்டலம் என சொல்லலாம்.
வீட்டில் உள்ள கருவிகள் ... மின்சாரத்தை கணக்கெடுக்கும் Watt-Hour Meter ப்ரிட்ஜ். ஏசி மற்றும் ஹீட்டரில் உள்ள thermostat கள்

வண்டியில் மைலேஜைக் காட்டும் odometer. இது எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடியுள்ளது எனக் காட்டும். செகண்ட் ஹாண்ட் விற்பவர்கள் இதை ரிவர்ஸில் சுத்தவிட்டு மைலஜை கம்மியாக காட்டுவார்கள். ஆட்டோவில் சூடு வைப்பதும் இந்த மீட்டரில் உள்ள சில பல்சக்கரங்களில் தான். ஆனால் இப்போது எல்லா கார்களிலும் கம்யூட்டர் உள்ளதால் இந்த odometer ஐ டிஜிடல் ஆக மாற்றி விட்டார்கள். இதில் ப்ராடு பண்ண வேண்டுமென்றால் Embedded software இல் பிஸ்தா வாக இருக்கவேண்டும். இந்த பிஸ்தாக்கள் நேர்வழியில் நிறைய சமபாதிப்பதால் இந்த ப்ராடுக்கு துணைப் போவதில்லை.
சரி அலுவலகத்திற்கு போகிறோம் அங்கே வாச்லில் உள்ள மாக்னெடிக் லாக் என்பது இன்னொரு கருவி. உங்கள் ID கார்டை ஒத்தி எடுத்தவுடன் கதவுதிறக்கும் அதேசமயத்தில் உள்ளே கம்யுட்டரில் நீங்கள் வந்த நேரம் பதிவாகிவிடும். ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் ஆபிஸில் இருந்தீர்கள என மானஜ்மென்ட் துல்லிய கணக்கு வைக்க ஏதுவாயிருக்கும்
கருவியியலில் பல பிரிவுகள் உண்டு. Test and Measuring Instruments, Bio-Medical Inistruments, Process Instruments ஆகியவை முக்கிய பிரிவுகள் ஆகும்.
இதில் அதிகம் சம்பளம் கிடைக்ககூடிய பிரிவு Process Instruments தான் இதில் உள்ள உட் பிரிவான Control System Software இல் உள்ளவர்கள் அதிக சம்பளம் பெறுபவர். நான் எந்த பிரிவு என தெரிந்திருக்க்கும் ஹி..ஹி..ஹி..
கருவிகள அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள்
சர்க்கரை ஆலைகள், காகித ஆலைகள், பால்பண்ணைகள், சிமெண்ட் ஆலைகள், துணி ஆலைகள், அனல்மின்சார உற்பத்தி நிலையங்கள், அணுமின் நிலையங்கள், மின்சாரம் விநியோகிக்கும் கம்பனிகள் மருந்து தாயாரிக்கும் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் (தங்கம், தாமிரம், யுரேனியம் ஆகியவை). சிலிக்கான் சில்லுகள் செய்யும் தொழிற்சாலைகள், உணவு பண்டங்கள் செய்யும் தொழிற்சாலைகள், சாரயத் தொழிற்சாலைகள், பீர் தொழிற்சாலைகள், உரத்தொழிற்சாலைகள், இரசாயன தொழிற்சாலைகள் கடைசியாக எண்ணை மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள்.

இந்த தொழிற்சாலைகளில் யுரேனிய சுரங்கம் சிலிக்கான் தொழிற்சாலைகள் தவிர மற்ற எல்லா தொழிற்சாலைகளிலும் அடியேன் மூக்கை நுழைத்துள்ளேன்.

இதில் அதிக லாபம் தரும் தொழிற்சாலை எண்ணை மற்றும் எரிவாயு. அதில் தான் நான் புரிகிறேன்.
மேலே உள்ள அதிநவீன Control System மை வடிவமைத்ததில் அடியேனின் பங்கும் உள்ளது. இது இந்தியாவில் மேற்கோடியில் ஒரு குக்கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த Control System தயாரிப்பாளர்கள் உலகில் 6 பேர் தான். அதில் 3 அமெரிக்க கம்பெனிகள். ஒரு சூவீடன் நாட்டு கம்பெனி (ஆனால் பெரும்பாலான தயாரிப்புகள் அமெரிக்காவில்), ஒரு ஜெர்மானிய கம்பெனி, ஒரு ஜப்பானிய கம்பெனி.
இந்த 6 கம்பெனிகளும் பெருமளவு வேலைகளை இந்தியாவில் இருந்து தருவித்துக் கொள்கிறது. சென்னை, பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் இந்த கம்பெனிகளின் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன
இந்த கருவிகளை உபயோகிக்கும் தொழிற்சாலைகள் இந்தியாவில் கிராமங்களில்தான் பெரும்பாலும் இருக்கும். அதனால் பல உள்கிராமங்களில் (ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், மே.வ, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில்) தங்க வாய்ப்புக் கிடைத்தது. அந்தந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறைகளை கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பல நண்பர்கள் கிடைத்தனர். நான் இந்த தொழிலுக்கு வரமால் இருந்திருந்தால் ஒரு காங்கீரிட் ஜங்கிளின் குரங்காக இருந்திருப்பேன்..
என்னால் மறக்கமுடியாத தொழிற்சாலைகள்
1.இயற்கை அழகு வாய்ந்த இடத்தில் அமைந்த சர்ச்சைக்குரிய என்ரானின் டபோல் மின்சார நிலையம்..
2. சவுத் இந்தியா விஸ்கோஸ், மேட்டுப்பாளயம் (மூடப்பட்டுவிட்டது)
3. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், ஊட்டி (மூடப்பட்டுவிட்டது)
4. குதிரேமுக் இரும்பு சுரங்கம்
5. கனடாவில் ப்ரிட்டிஷ் கொலாம்பியாவின் தாமிர சுரங்கம்
6. சவூதி அரேபியாவில் நட்ட நடு பாலைவனத்தில் இருந்த எரிவாயு தொழிற்சாலை
7. அபுதாபியிலிருந்து 250 கிமீயில் அமைந்துள்ள ரூவைஸ் என்ற சின்னஞ்சிறு குட்டி நகரம் (மொத்தம் 2000 வீடுகள்)
8. டென்மார்க்கின் உள்புறத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பாலாடைக் கட்டித் தொழிற்சாலை
9. வான்கூவரின் மலைக்கும் கடலுக்கும் இடையே உள்ள அனல் மின்சார நிலையம்
10. மகேந்திரகிரியில் உள்ள ராக்கெட் சோதனை நிலையம்
11. NASA வின் Cape Canaveral
12. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம்
13. சிங்கப்பூரின் டைகர் பியர் தொழிற்சாலை
14. குஜராத்தின் AMUL பால் பண்ணை
15. சத்தியமங்கலம் மற்றும் சிவகங்கையில் உள்ள சர்க்கரை ஆலைகள்
16, கொச்சியில் உள்ள ரிபைனரீயும், உரத்தொழிற்சாலையும் , பீனால் தொழிற்சாலயும்
17. கனடாவின் வடக்கே அமைந்துள்ள எண்ணை மணற் குவாரிகள்
என் தொழிலுக்கு வந்தனம்........