Monday, March 27, 2006

என் அரேபிய அனுபவங்கள் - இடைக் குறிப்பு

----------------------------------------------------------------------------------
முன் குறிப்பு பின்குறிப்பு போல் ஒர் இடைக்குறிப்பு
முதல் நான்கு அத்தியாங்கள் வரை எனக்கு ஆதரவாகவெ பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் வந்தன.

பிறகு திரு மலர்மன்னன் அவர்களை நான் .. நான் தான் அழைத்து வந்தேன். அவரை அழைத்துவந்தவுடன் எனக்கு கிடைத்தப் பட்டங்கள்

1. பார்பணிய வாதி

2. முஸ்லிம்களின் விரோதி

3.சூழ்ச்சிக் காரன்


மற்றும் அச்சில் எற்ற முடியாத வார்த்தைகளால் வசவுகள்.


நான் 99.9% அரேபியர்கள் தீயவர்கள் என்று சொன்னேன். ஒருவர் கேட்கிறார் அதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கமா என்று?. நல்ல கேள்வி. என் முதல் பதிவில் முன்குறிப்பு ஒன்றைப் பாருங்கள். நான் சந்தித்த அரேபியர்களில் 99.9% தீயவர்களே. ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி அடைமொழிகளுடன் எழுதினால் அப்புறம் என் கட்டுரை ஒரு சட்ட கட்டுரை போல் இருக்கும். சரியா சல்மான்.


அன்பு என்பவர் அதற்க்கும் மேல். எதோ நான் அதிக பின்னூட்டம் பெற எழுதுவாதகவும் இஸ்லாமிய விரோதி என்றும் கத்துகிறார். பார்க்க என் முன்குறிப்பு- 2. உண்மை நிகழ்ச்சியை உண்மை பெயரிட்டு எழுதிய தைரியமான இஸ்லாமிய சகோதரரை சந்தேகிக்கிறார். நான் உங்கள் முன்னேற்றதிற்கு எந்த வகையில் தடையாய் இருக்கிறேன். உங்கள் முன்னெற்றம் உங்கள் கையில்தான் என்னிடத்தில் இல்லை.


நிறைய பேர்கள் இந்த மாதிரி அரேபியாவிலிருந்து எழுதுவதுதானே வீரம். கனாடா போனபிறகு எழுதுவது கோழைத் தனம் என்று புனைப் பெயர்களுக்குப் பின் நின்று சவுண்டு விடுகின்றனர்.

ஐயா... நான் ஓர் கோழை அதனால் தான் இங்கு வந்த பிறகு எழுதுகிறேன். நீங்கள் எல்லோரும் உங்களுக்கு நடக்கும் நல்லவைகளை உங்கள் பெயர் மற்றும் படம் போட்டு தயவு செய்து எழுதுங்கள்.

அடுத்து அரேபியாவில் அதிகம் பணம் சம்பாதித்து நன்றி மறந்த நாய் என்று சொல்லி மகிழ்ந்தனர். நான் பலமுறை சொல்லிவிட்டேன் நடந்தது வியாபாரம் அங்கே நன்றி என்பதற்கு இடமில்லை.


அடுத்து அச்சில் எற முடியாத வார்த்தைகளால் மின்னஞ்சல்கள். நாம் எல்லோரும் எழுதுவது அழகிய தமிழ் மொழியில் அதுவும் தமிழ்மணம் என்ற கௌரவமான தளத்தில். ஆகையால் நாம் எல்லோரும் நாகரிகமாக எழுதுவோமே. அதற்க்கு உடன் படாதவர்கள் தமிழ்நாற்றம் என்று தளம் அமைத்து பேசுங்கள்...ப்ளீஸ்


என்னுடைய அரேபிய அனுபவங்கள் தொடரும்....... தயவு செய்து மேலெ உள்ள சப்ஜெக்டுகளில் மீண்டும் மீண்டும் பின்னூட்டம் அளிக்க வேண்டாம் என அன்புடன் தயைக் கூர்ந்து தாழ்மையுடன் உங்கள் காலைத் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.


இடைக்குறிப்பிற்கு ஒரு பின்குறிப்பு:


உண்மையான பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுப்பவர்களின் பின்னூட்டங்கள் பதிக்கப் படும். உண்மையான பெயர் மற்றும் முகவரிகளை மறைத்துவ்டுகிறேன்.


"யோவ்!.. அப்ப அந்த நீசத்தனமான நேசகுமாரின் விவரங்கள் உன்னிடம் உள்ளனவா?" ஒருவர் கேட்கபோவது இப்பவே கேட்கிறது.

என்னுடைய பதில் " ஆம்"

(சாரி நேசகுமார் வலைபதிவாளர்களின் பழகி நானும்....)

9 comments:

said...

சிவா,
உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவிட்டார்கள் என்பதே உண்மை.

தொடருங்கள், உங்கள் அனுபவங்கள் உண்மை என்கிறவகையில் நீங்கள் அதை பதிப்பதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் சொல்லமுடியாது என்பதே என் கருத்து.

பலரும் புனைபெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்து எழுதுகிறார்கள். இவர்களிடும் உண்மையில் எந்த வித 'உண்மையான' உணர்வுகள் இருக்குமா என சந்தேகமே வருகிறது.

உங்கள் அரேபிய அனுபவங்களில் நீங்கள் சந்தித்த சில நல்லவர்கள் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். தொடருங்கள்.

said...

நல்ல முறையில் சென்று கொண்டிருந்தது உங்கள் பதிவுகள். பின்னூட்டம் இடவில்லையெனினும் தவறாமல் படித்து வந்தேன்.
பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளன. தெடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு என்று உள்ள வாசகர் வட்டம் எப்போதும் இருக்கும்.

said...

//சிவா,
உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவிட்டார்கள் என்பதே உண்மை.

தொடருங்கள், உங்கள் அனுபவங்கள் உண்மை என்கிறவகையில் நீங்கள் அதை பதிப்பதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் சொல்லமுடியாது என்பதே என் கருத்து. //

Same opinion as mine.

Continue the good work.

munna

said...

//
உங்கள் நேர்மையான பதிவுகளை பலர் திசை திருப்பிவிட்டார்கள் என்பதே உண்மை.//


சரியாகவே சொன்னீர்கள்.

//
உங்கள் அரேபிய அனுபவங்களில் நீங்கள் சந்தித்த சில நல்லவர்கள் பற்றியும் எழுதுவீர்கள் என நினைக்கிறேன். தொடருங்கள்.//

நானும் எதிர்பார்கிறேன்.

மதம் என்பது என்றுமே Sensitive ஆன விஷயம் என்பதால், பல நேரங்களில் "response" ஐ விட "reaction" தான் அதிகம் வரும்.
நாம் தான் அதை பகுத்து பதில் பின்னூட்டம் இட வேண்டும்.

நன்றி
ஷங்கர்.

said...

சிவா,

அதற்குத்தான் நான் முதலிலேயே சொன்னேன்..அங்கங்கே டிஸ்கிளெமர் போட்டு எழுதுங்க என்று...

மலர்மன்னனை நீங்கள் கொண்டு வந்ததும் பிரச்சினை அதிகமாக காரணம்....நீங்கள் சில தனிப்பட்ட ஆட்களை பற்றி எழுதினால் மலர்மன்னன் ஒரு மார்க்கத்தையே தாக்கி எழுதுபவர்...அதுவும் இல்லாமல் இன்னொரு மார்க்கத்தை விமர்சனம் இல்லாமல் தூக்கி பிடிப்பவர்...இதுதான் பிரச்சினைக்கு ஆணிவேர்..

மற்றபடி நம் ஆட்கள் அங்கு(அரபு நாடுகளில்) எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை எல்லாம் விளக்கமாக எழுதுங்கள்.பலருக்கும் இது உபயொகமாக இருக்கும்...

said...

சிவா,

தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் வாழ்வில் நீங்கள் பார்த்த விசயங்களை பற்றி எழுத யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியது இல்லை.

said...

சிவா அண்ணா. உங்கள் அரேபிய அனுபவத் தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அரேபியாவைப் பற்றிப் படிப்பது புதிது என்பதால் பின்னூட்டம் இடவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். படிக்கிறோம். புனைப்பெயரின் பின்னால் ஒளிந்து கொள்பவர்கள் இப்படித்தான் கூச்சல் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அடியேனுக்கும் வருகிறது அவர்களின் திட்டும் பின்னூட்டங்கள் - பதிக்கத் தக்கதாய் இருந்தால் பதிக்கிறேன். இவ்வளவுக்கும் நான் மற்ற மதங்களைப் பற்றி (தாழ்த்தியோ உயர்த்தியோ) எழுதவில்லை. சமயத்தமிழ் இலக்கியங்களைப் பற்றித் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கே சிலருக்கு எரிகிறது. :-)

said...

குமரா,

உனக்கும் வசவுகளா. என்னடா தமிழ் உலகம் இது. நீ எழுதுவது கோனார் உரை தானே. திட்டு வாங்காத வலைப் பதிவாளர்களுக்கு பரிசு வழங்காலம் போலிருக்கிறதே. நானாவது அரேபியரின் மேல் வெறுப்பை கக்குகிறேன். உங்கள் எழுத்தில் அன்புதானே இருக்கிறது. உங்களையும் திட்டுகிறார்கள் என்றால் அவ்வாறு செய்பவர்கள் மனச் சிதைவு அடைந்தவர்களாக தான் இருக்க வேண்டும். பாவம் அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப் படுகிறது.

said...

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

உங்களின் கீபோர்டுகளே காண்டீபங்கள். அதில் உங்களின் கைவண்ணங்கள் தொடர்ந்தால் தமிழ் அம்புகள்தானே கூராகும்?

ஆகையினால் தமிழை காதல் கொள்வீர்! சலசலப்புகளை சட்டை செய்யீர்!!

அன்புடன்,
சரவணன்